சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் தங்கள் மன வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனர்.

தற்போது வரை அதுதான் இன்டர்நெட்டில் தலைப்புச் செய்தியாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோக தனுஷின் அடுத்தடுத்த பட அறிவிப்பு அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதில் கடந்த டிசம்பர் மாதம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுக்க மாபெரும் வெற்றியடைந்த புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு தனுஷை இயக்குகிறார் என்ற செய்தி தீயாய் பரவியது.
இது உண்மையா என ஆராய்ந்த போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது தனுஷ் அடுத்ததாக செல்வராகவன், மாரி செல்வராஜ் தெலுங்கு பட இயக்குனர்கள் படத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

அதேபோல இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் முடித்தபிறகு அவருக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு முதல் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சிவகுமார் வரை அவருக்காக காத்திருக்கின்றனர். ஆதலால் தனுஷின் அடுத்தடுத்த படங்களும் சுகுமாரின் அடுத்தடுத்த படங்களும் முடிந்தால் தான் இவர்கள் இணையும் புதியபடம் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
