விஜய் நடிக்க மறுத்து தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. ச்ச தளபதி நடித்திருந்தால் வேற லெவல்….

Published on: July 16, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழ்கிறார் தளபதி விஜய். இவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாட இங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது, வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர்.

நடிகர் விஜய், தனக்கென ஒரு திரைப்படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படி, தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் என்பதாலோ என்று தெரியவில்லை அவரது திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெறுவது வழக்கம்.

இதையும் படிங்களேன் – மீண்டும் நடிக்க வரும் கவுண்டமணி… அதிர வைத்த கண்டிஷன்கள்… பேரதிர்ச்சியான சிவகார்த்திகேயன்…

இதற்கிடையில், கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ திரைப்படத்தில் தனுஷ், கார்த்திக் மற்றும் அமைரா தஸ்துரின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம், முதலில் இந்த படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னபோது, விஜய் படத்தை இப்போதைக்கு நடிக்கவில்லை என்று நிராகரித்து விட்டாராம். அதன் பின், தனுஷிடம் இப்படத்தின் கதையை ஓகே சொல்லி தனுஷ் நடித்தாராம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.