Cinema History
தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!
தமிழ்த்திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் தன்னை வளர்த்து விட்டவர்களை நினைத்துப் பார்க்கிறார்களா என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவத்தை இங்கு பார்ப்போம்.
தனுஷ் ‘3’ என்ற படத்தில் சந்தானத்தை காமெடி ரோலில் போட்டார். ஆனால் 3 நாளில் நடிக்காமல் விலகி விட்டார். ஏன்னா நம்மை அறிமுகப்படுத்தியது சிம்பு. தனுஷ் படத்தில் நாம் நடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று நினைத்தார். உடனே தனுஷ் வேறு ஒரு காமெடியனை அந்த ரோலில் தேடுகிறார். அப்போது மெரினா என்ற படத்தில் ஒரு பையன் நடித்துக் கொண்டு இருக்கிறான் என்ற தகவல் வருகிறது. உடனே தனுஷ் தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனைத் தொடர்பு கொள்கிறார்கள்.
அப்போது இயக்குனர் பாண்டிராஜ், ‘நீ இந்தப் படத்தில் நடித்தால் உனக்கு காமெடியன் என்று முத்திரை குத்தி விடுவார்கள். தொடர்ந்து அது மாதிரியான கேரக்டர்கள் தான் வரும்’ என்கிறார். உடனே ‘எனக்கு விமல் மாதிரி ஹீரோவாகணும்’ என்கிறார். அதற்கு பாண்டிராஜ் ‘இந்தப் படத்தில் நடித்தால் வரலாம்’ என்று அவரது படத்திற்கு அழைக்கிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 3 படத்திற்கு கமிட் ஆகிறார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தனி கிளாப்ஸ் கிடைத்தது. அதை உணர்ந்து கொண்ட தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்துத் தொடர்ந்து படங்கள் எடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் வளர்ந்து விடுகிறார். ‘தனுஷ் இவன் நம்ம வளர்த்து விட்ட பையன், கடைசி வரை நம்ம பேச்சைக் கேட்டுக்கிட்டு இருப்பான்’னு நினைக்கிறாரு. ஆனா அடுத்தடுத்த படங்களின் வெற்றி தனுஷையே நிராகரிக்கிற அளவுக்கு சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டது. தனுஷ் ஆபீசுக்கு எதிரே பில்டிங் போட்டு இவர் ஆபீஸ் போடுகிறார்.
இதையும் படிங்க… பாக்கியராஜ் படத்தில் சிவாஜி நடிக்க இதுதான் காரணமாம்..! மனுஷனுக்கு எவ்ளோ பெரிய மனுசு..!
அதே போல சிவகார்த்திகேயன் சூரியை தூக்கி விடணும்னு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். அது தான் ‘கொட்டுக்காளி’. நாளை சூரிக்கும் 4 படங்கள் ஹிட்டானால், சிவகார்த்திகேயனை எப்படி நினைப்பார் என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது.
மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.