
Cinema News
நான் வர மாட்டேன்…என்ன விட்டுருங்க…கதறி அழுத தனுஷ்…!
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படத்திலயே இளமை துள்ளும் வேகத்தில் நடித்தார். இவரின் அந்த நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினர். பள்ளி பருவத்தில் இருந்த அவர் சவாலான கதாபாத்திரத்தில் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்தை இயக்கியவர் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன். ஆறு நண்பர்கள் அவர்களின் வீட்டில் ஏற்படும் குழப்பமான பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஓடுகிறார்கள்.பழைய நண்பரின் உதவியால் அடைக்கலம் அடைகிறார்கள்.இருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.இது தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.
இதில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகங்கள் தனுஷ் உட்பட. இந்த படத்திற்காக நிறைய புதுமுகங்களை தேடி உள்ளனர். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா எழுதிய நாவலின் அடிப்படையில் அமைந்த கதையாம் இது. கஸ்தூரி ராஜாவிற்கு தனுஷை நடிக்க வைக்க இஷ்டமே இல்லையாம். ஏன் அவரின் இரண்டு மகன்களும் சினிமா பக்கமே வரக் கூடாது என எண்ணினாராம். அவர் எடுக்கும் படத்தின் ப்ரிஃப்யூ கூட பார்க்க கூட்டிக் கொண்டு போக மாட்டாராம். அந்த அளவுக்கு கடுமையாக இருப்பாராம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் தனுஷிற்கும் சினிமாவில் நடிக்க ஆர்வமே கிடையாதாம். இந்த படத்தில் அவர் நடிக்கும் போது படித்துக் கொண்டிருந்தாராம். நடிக்க வானு கூப்பிட்டால் நான் வர மாட்டேன், என்னை விட்டு விடுங்கள் என்று கதறி அழுவாராம். தனுஷ் ஆரம்பத்தில் நடித்த 5 படங்கள் வரைக்கும் ஆர்வமே இல்லாமல் தான் நடித்தாராம். ஆனால் அன்று அப்படி இருந்தவர் இன்று ஒரு தேசிய விருது வாங்கிய நடிகராக வளர்ச்சி பெற்றிருக்கிறார்.