பூவ வைக்க வேற இடக்கலயா செல்லம்!. தர்ஷாவை பாத்து கிறங்கும் நெட்டிசன்கள்!..
Dharsha gupta: விஜய் டிவி மூலம் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பிரபலமானவர்கள் பலர். அதில் தர்ஷா குப்தாவும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். அப்போதே அழகை கும்மென காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.
தர்ஷா கோவையை சேர்ந்தவர். சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்பட்டு இங்கே வந்தார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சீரியல் பக்கம் போனார். சீரியலுக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதன்பின், சில டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்படியே சினிமாவில் மீண்டும் வாய்ப்பு தேடிய போது ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. அடுத்து, சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் ஓடவில்லை.
இப்போது மெடிக்கிள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமாவது தனக்கு கை கொடுக்கும் என காத்திருக்கிறார். ஆனால், இந்த படத்தை பற்றி ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, ரசிகர்களை தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக கிளுகிளுப்பான ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து ஒரு பக்கம் பூ ஒன்றை வைத்து கிறங்க வைக்கும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.