Dharsha gupta, கோலிவுட்டில் திறமையை காட்டி பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. ஆனால், அவர் எதிர்பார்த்தது இங்கே நடக்கவில்லை. சினிமா நடிகையாக மாறுவது அவ்வளவு சுலபமில்லை என புரிந்து கொண்டார்.

எனவே, சின்னத்திரை பக்கம் சென்று சீரியலில் திறமை காட்டினார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே பால்மேனியை விதவிதமாக காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போட்டு காத்திருந்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், இரண்டுமே தோல்வி படமாக அமைந்தது.

இப்போது மெடிக்கிள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலமாவது தனக்கு வாய்ப்புகள் வரும் என காத்திருக்கும் தர்ஷா பளிங்கு மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இது யாராவது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்ணில் படாதா என்கிற ஏக்கத்துடன் இருக்கிறார். அந்த வகையில், தூக்கலான கவர்ச்சி உடையை அணிந்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளது.

