நடிகையெல்லாம் உன்கிட்ட தோத்து போகணும்!. டிடியின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்..

சினிமா நடிகைகள் போலவே டிவி தொகுப்பாளினிகளும் ரசிகர்களுடம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஏனெனில், பெரிய திரையை விட ரசிகர்கள் அதிகம் நேரம் செலவழிப்பது சின்னத்திரையில்தான். அதனால்தான் தொலைக்காட்சி தொகுப்பளினிகளும் ரசிகர்களும் விரைவிலேயே புகழடைந்து விடுகிறார்கள்.

dd

எல்லா டிவி சேனல்களிலும் ஆங்கர்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் பிரபலமாகிவிடுவதில்லை. விஜய் டிவி என்றாலே டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினிதான் மிகவும் பிரபலம். இவர் நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது. இதில், கலந்து கொள்ளும் திரைப்பிரபலங்கள் எவ்வளவு ரகசியம் என்றாலும் சரி டிடி-யிடம் சொல்லிவிடுவார்கள். ஏனெனில், அவ்வளவு இயல்பாகவும், ஜாலியாகவும் பேசி வழிக்கு கொண்டுவந்துவிடுவார்.

dd

பாலச்சந்தர் இயக்கிய கையளவு மனசு சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். அதன்பின் பல வருடங்கள் கழித்து சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்திலும் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

dd

ஒருபக்கம், மாடலிங்கிலும் ஆர்வமுள்ள டிடி அவ்வப்போது நடிகைகள் போல உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் லண்டனுக்கு சுற்றுலா சென்ற டிடி அங்கு போட்டோஷுட் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

dd

 

Related Articles

Next Story