தூக்கலா காட்டுறியே தூங்கவிடாம பண்ணுறியே!.. இளசுகளை இம்சை பண்ணும் திவ்யா துரைசாமி...

Dhiyva duraisamy: இப்போதெல்லாம் ஊடகங்களில் வேலை செய்பவர்களும் கூட ரசிகர்களிடம் பிரபலமாக ஆசைப்பட்டு மாடலிங் மற்றும் சினிமா ஆகிய துறைகளுக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். அதற்கு காரணம் ரசிகர்களிடம் பிரபலமாகி சினிமாவில் நடித்து நிறைய சம்பாதித்து கார், பங்களா என வசதியாக வாழத்தான் என சொல்லி தெரியவேண்டிதில்லை.
ஆனால், இது எல்லோருக்கும் அமையும் என சொல்ல முடியாது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு போனவர் பிரியா பவானி சங்கர். அவருக்கு எல்லாம் சரியாக அமைந்தது. அவரை போலவே ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிதா சம்பத். ஆனால், அவரை சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த வரிசையில் வருபவர்தான் திவ்யா துரைசாமி. ஊடகங்களில் பல வருட அனுபவம் உள்ளவர். சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளாராகவும் வேலை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அதை விட்டுவிட்டு மாடலிங் செய்வது, குறும்படங்களில் நடிப்பது, யுடியூப்பில் புது படங்களை விமர்சனம் செய்வது என ரூட்டை மாற்றினார்.
இதைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. சஞ்சீவன் என்கிற ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கும் திவ்யா துரைசாமி தற்போது வேறு ரூட்டுக்கு மாறியுள்ளார்.
கவர்ச்சி நடிகைகள் போல உடைகளை அணிந்து அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், இடுப்பழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் செய்து பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.