நடிகையின் செயலைக் கண்டு கடுப்பான தோனி - என்ன பண்ணார் தெரியுமா? தல ரொம்ப கோவக்காரரா இருக்காரே
இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. சினிமாவில் தல என்றால் அஜித். அதே போல தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் தோனி. அந்த அளவுக்கு தோனி மீது தமிழக ரசிகர்கள் வெறித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர். அதற்கு காரணம் சென்னை அணிக்காக விளையாடுவதும் அதற்கு முன் அவர் செய்த சாதனைகளும் தான்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த தோனி இப்போது சினிமா பக்கமும் தன் க்வனத்தை திருப்பியிருக்கிறார். புரடக்ஷன் கம்பெனி ஆரம்பித்து முதன் முதலாக ஒரு தமிழ் படத்தை தயாரித்திருக்கிறார். தோனி எண்டெர்டெயின்மெண்ட் மூலமாக தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் நடிகர் ஹரீஸ் கல்யாண் மற்றும் லவ் டுடே புகழ் இவானா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அவர்களுடன் இணைந்து நடிகை நதியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, மிர்ச்சி விஜய், வெங்கட் பிரபு, விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கின்றனர். படம் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது.
அதனால் படத்திற்கான புரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பட புரோமோஷனுக்காக கலந்து கொள்ள வந்த ஹரீஸ் கல்யாண், இவானா மற்றும் தோனியின் மேனேஜர் ஆகியோரிடம் படத்தை பற்றி சில சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க : மகளை வைத்து சம்பாதிக்க நினைத்த அம்மா!.. அப்படித்தான் அந்த நடிகை டாப் ஹீரோயினாக மாறினாரா?..
அப்போது சில தெரியாத விஷயங்களும் வெளிவந்தன. அதாவது தோனியின் மேனேஜர் கூறும் போது படத்தை தோனி மற்றும் அவரது குடும்பத்தார்கள் பார்த்தார்களாம். அப்போது படத்தை பார்த்து விட்டு இடைவேளை சமயத்தில் இவானாவின் கேரக்டட் பிடிக்கவில்லை என்று தோனி சொன்னாராம்.
ஏனெனில் படத்தில் இவானாவின் கதாபாத்திரம் அம்மாவையும் மகனையும் பிரிக்கிற மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காரணத்திற்காகவே இவானாவிடம் தோனி ‘ ivaana i dont like your character in this movie’ என்று சொன்னாராம். ஆனால் படத்தை பார்க்க பார்க்க அந்த எண்ணம் மாறிவிட்டதாம். மற்றபடி தனிப்பட்ட முறையில் இவானாவை பிடிக்கும் என்றும் அவருடைய கதாபாத்திரம்தான் பிடிக்கவில்லை என்றும் தோனி சொன்னதாக அவருடைய மேனேஜர் கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘தல இந்த ஒரு படத்திற்கே இப்படி எமோஷன் ஆகிறாரே, இன்னும் எவ்ளவோ இருக்கு. எப்படி சமாளிப்பார்’என்று கிண்டலாக கூறிவருகிறார்கள்.