தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஹீரோ இவர்தான்… செம சர்ப்ரைஸ்…
பிரபல கிரிக்கெட் வீரரான தோனி, தற்போது தோனி என்டெர்டெயிமென்ட் என்ற பெயரில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார் தோனி.
சில மாதங்களுக்கு முன்பு தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது.
எனினும் அதனை தொடர்ந்து தோனி, விஜய்யை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் தற்போது வரிசையாக பல திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் ஆகி வருவதால் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகுதான் கால்ஷீட் தர முடியும் என்று கூறிவிட்டாராம்.
இந்த நிலையில் தற்போது தோனி தயாரிக்கும் முதல் திரைப்படம் குறித்த சூடான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் ஹரீஷ் கல்யாண், தோனி தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஹரீஷ் கல்யாண் “பியார் பிரேம காதல்”, “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”, “தாராள பிரபு”, “ஓ மணப்பெண்ணே” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது “நூறு கோடி வானவில்”, “டீசல்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஹரீஷ் கல்யாணுக்கும் நர்மதா என்ற பெண்ணுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.