
Cinema News
தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் பிரபலம்..

DHONI
மகேந்திர சிங் தோனி, சுருக்கமாக எம்.எஸ்.தோனி என்று அறியப்படும் இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சர்வதேசத் கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலுள்ள நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

LGM
மேலும் தோனி சி.எஸ்.கே அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். தற்போது அவர் ”தோனி என்டர்டைன்மென்ட்” என்ற புதிய பட தயாரிப்பு கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் முதல் முதலாக தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். அதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக மற்றும் லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

NATHIYA
தமிழில் 1985 இல் வெளியாகி வெற்றி பெற்ற படம் பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகம் ஆகி முன்னணி கதாநாயக வலம் வந்தவர் நடிகை நதியா. பின்னர் திருமணம் ஆகி தன் கணவருடன் லண்டனில் வசித்து வந்தார். இவருக்கு இரு மகள்கள் உள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்த தொடங்கினார், எம்.குமரன். சன்.ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை பின்னர் தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வந்தார்.

LGM
நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனி தயாரிக்கும் இப்படத்தில் இணைந்துள்ளார். ரமேஷ் தமிழ்மணி படத்தை இயக்குகிறார் நதியுடன் சேர்ந்து காமெடி நடிகர் யோகி பாபு இதில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது சமீபத்தில் யோகிபாபு உடன் நதியா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

NATHIYA