இந்த தீபாவளிக்கு தூள் கிளப்புவரா துருவ் விக்ரம்?.. பைசன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!..

by Saranya M |   ( Updated:2025-05-03 09:35:52  )
இந்த தீபாவளிக்கு தூள் கிளப்புவரா துருவ் விக்ரம்?.. பைசன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!..
X

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்துள்ளனர். கபடி வீரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் விகரமின் மகனான துருவ் விகரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹிரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் தன் தந்தை விக்ரமுடன் மகான் படத்தில் நடித்திருந்தார். மேலும், தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

துருவ் விக்ரம் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை காதலிப்பதாக வதந்திகள் பரவின. அவர்கள் இருவரும் ஒரு மியூசிக் ஆப்பில் முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. அது பட விளம்பரத்திற்காகவோ அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

துருவ் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாது பாடல்களை பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதை தொடர்ந்து பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பைசன் படத்திற்காக தீவிர கபடி பயிற்சி மேற்கொண்டுள்ள துருவ் இரண்டு ஆண்டுகளாக வேறு படங்களில் நடிக்காமல் இந்த படத்திற்காக முழு ஈடுபாடுடன் உழைத்து வருகிறார்.

மேலும், துருவ் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்கள் மற்றும் சில அப்டேட்டுகளை ஷேர் செய்து வரும் நிலையில் தற்போது அவர் நடித்து வரும் பைசன் படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 17ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை துருவ் நடிப்பில் வெளியான படங்கள் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கண்டிப்பாக அவருக்கு ஒரு மெகா ஹிட் படம் பார்சலாகும் என சீயான் விக்ரம் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Next Story