அந்த நடிகையுடன் லிப்கிஸ்!. துருவ் விக்ரம் டேட்டிங் போட்டோ! லீக்..

Dhuruv :நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். அப்பாவை போல ஹேண்ட்சம் லுக் கொண்டவர். கல்லூரி பெண்களிடம் இவருக்கு கிரேஸ் அதிகம். தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் வர்மா என்கிற பெயரில் தமிழில் உருவானது. இந்த படத்தில் மகன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விக்ரம் தனக்கு சேது மூலம் வாழ்க்கை கொடுத்த பாலாவையே இந்த படத்தை இயக்க சொன்னார்.
படமும் முடிந்த பின் படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கும், விக்ரம் குடும்பத்தினருக்கும் படம் பிடிக்கவில்லை. எனவே, இதே கதையை வேறு இயக்குனரை வைத்து எடுப்போம் என முடிவு செய்தனர். இது பாலாவுக்கு அவமானமாகிப்போனது. வேறு ஒருவர் இயக்கி ஆதித்ய வர்மா என்கிற பெயரில் இப்படம் வெளியானது.

அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ இயக்கத்தில் விக்ரம் நடித்த மகான் படத்தில் அவரின் மகனாகவே நடித்திருந்தார். இந்த படம் நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் அடிக்கவில்லை. இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இது முழுக்க முழுக்க கபடி விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில்தான், நடிகை அனுபமாவுக்கு துருவ் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சினிமாவில் அனுபமா துருவுக்கு சீனியர். துருவ் விக்ரமை விட 2 வயது மூத்தவர். இருவருக்கும் இடையே காதல் என இதுவரை செய்தி வெளியாகாத நிலையில் லிப் கிஸ் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.