சியான் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்து வருகிறது.
இந்த ஆண்டு கண்டிப்பாக துருவ நட்சத்திரம் படம் வெளியாகிவிடும் என கெளதம் மேனன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும், படத்தின் பேட்ச் வொர்க்கிற்கும் தங்கலான் படத்தின் ஓய்வு கேப்பில் விக்ரம் நடித்துக் கொடுக்க படம் ஒருவழியாக போஸ்ட் புரொடக்ஷனுக்கு சென்று விட்டது.
மஹான் படத்தில் பண்ணது போல:
கடைசி நேரத்தில் மஹான் படத்தில் இருந்து எப்படி வாணி போஜனை வெட்டி எறிந்தார்களோ அதே போல, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போர்ஷனையே வெட்டி தூக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் திரையுலகையே ஷாக் ஆக்கின. சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு போட்டியாக படம் ஜூலை 14ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவீரன் படத்தின் ஓடிடி ரிலீஸே வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது என்கிற அறிவிப்பே வந்து விட்டது.
ஆனால், இன்னமும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் கெளதம் மேனன் ஃபிக்ஸ் செய்யவில்லை. கண்டிப்பாக ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் சில வாரங்கள் தியேட்டரை வியாபித்து இருக்கும் என்பதால், செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்து விடலாம் என திட்டமிட்டு இருந்தனர். அக்டோபர் மாதத்துக்கு சென்றால் அங்கே விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸ் உள்ளது.
செப்டம்பர் மாதமும் ரிலீஸ் இல்லை:
இந்நிலையில், கடைசியாக கசிந்த தகவல்களின் படி துருவ நட்சத்திரம் திரைப்படம் செப்டம்பர் மாதமும் ரிலீஸ் ஆகாது என்றும் தீபாவளி ரேஸுக்கு செல்லுமா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. தீபாவளிக்கும் படம் வெளியாகவில்லை என்றால் டிசம்பர் மாதம் கேப்டன் மில்லர் படத்துடன் மோதும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி நடித்துள்ள தங்கலான் படமே ரிலீ|ஸ் ஆகிவிடும் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன் எப்போது தான் ஜானை ரசிகர்கள் கண்ணில் காட்டுவார் என பலரும் காத்திருக்கின்றனர்.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…