Categories: Cinema News latest news

ஸ்டைலாக எண்ட்ரியாகும் வர்மா..! மாஸ் கம்பேக் கொடுத்த விக்ரம்.. ஆக்‌ஷனில் மாஸ் காட்டும் துருவ நட்சத்திரம் ட்ரைலர்..!

Dhruva Natchathiram: கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரம் நடித்து இருக்கிறார். தீபாவளி  தின ரிலீஸாக வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் திரைக்கு வந்து இருக்கிறது. 

படம் முதலில் 2013ல் சூர்யாவை வைத்து தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்குப் பிறகு, கௌதம் மேனனுக்கும் சூர்யாவுக்கு செட்டாகாமல் சூர்யா இப்படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து மீண்டும் ஹீரோ வேட்டை தொடங்கியது.

இதையும் படிங்க: ஆல்ரெடி ஆறு மாசமாச்சி!. அஜித் பண்ற வேலையில இன்னும் இழுக்கும்போல!. விடாமுயற்சி பரிதாபங்கள்!..

அதையடுத்து விக்ரம் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து 3 வருடம் கழித்தே படப்பிடிப்புக்கு சென்றது படக்குழு. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம், இந்த வருட துவக்கத்தில் ரிலீஸுக்கு ப்ளான் செய்து இருந்தனர். ஆனால் அதுவும் பிரச்னை ஆனது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

படத்தில் விக்ரமுடன், ரிதுவர்மா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், டிடி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். 2017ல் ரிலீஸாக இருந்த இப்படம் பல கட்டமாக தள்ளி போனது. இந்நிலையில் இப்படத்தினை  இந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: ரசிகர்களை ஏமாற்றிய தங்கலான்!… மீண்டும் படையெடுக்கும் விக்ரம்… காரணம் இதுதானாம்!…

இதையடுத்து இப்படத்தின் ட்ரைலரை படக்குழு ரிலீஸ் செய்து இருக்கிறது. ஜெயிலரில் வில்லனாக நடித்த வர்மா ஸ்டைலிஷாக நடித்து இருக்கிறார். கிட்டத்தட்ட ட்ரைலரே அதிரடியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

டிரைலர் வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=udAlOSn4yFo

Published by
Akhilan