தங்கையாக நடித்தவரை ஜோடியாக்கிய தனுஷ்!.. எக்ஸ் மாமனார் வழியை இதுலயேயும் ஃபாலோ பண்றாரா?..

#image_title
நடிகர் தனுஷ் நடிப்பைத் தாண்டி அப்பா மற்றும் அண்ணன் போல இயக்குநராக ப. பாண்டி படத்தின் மூலம் மாறினார். சென்ற ஆண்டு வெளியாகிய ராயன் திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி நடித்து 150 கோடி வரை வசூல் ஈட்டினார். அதை தொடர்ந்து அவர் சகோதரி மகனான பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
அடுத்த்தாக இட்லிகடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷின் அடுத்த படத்திற்கு துஷாரா விஜயன் ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ், அருண் விஜய் மற்றும் நித்தியா மேனன் இணைந்து நடித்துள்ள இட்லிகடை படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஒடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ராஞ்னா படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் இவர்கள் இருவரது காம்பினேஷனில் தேரே இஷ்க் மெய்ன் படம் உருவாகிவருகிறது. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படமும் வருகிற ஜூன் மாதம் ரீலிசாக உள்ளது.
தொடர்ந்து வெளியாக உள்ள தனுஷ் படங்களுக்ககாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவரது அடுத்த படத்தை லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லப்பர் பந்து படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்கு துஷாரா விஜயன் ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துஷாரா விஜயன் ராயன் படத்தில் தங்கையாக நடித்த நிலையில், இந்த படத்தில் ஜோடியாக நடிக்கப்போகிறார் என்கின்றனர். ரஜினிகாந்தின் மகளாக நடித்த மீனா ஜோடியாக நடித்த நிலையில், இதெல்லாம் சினிமாவில் சகஜம் என்கின்றனர். முன்னதாக நஸ்ரியா இந்த படத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால், நயன் தாரா விவகாரத்தில் அவரும் தனுஷுக்கு எதிராக கைகோர்த்த நிலையில், துஷாராவுக்கு சான்ஸ் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும்.
துஷாரா விஜயன் விக்ரமுடன் இணைந்து நடித்த வீர தீர சூரன் 2ம் பாகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஈட்டி படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திலும் துஷாரா தான் ஜோடியாம்.