சின்ன பையன் கூட எல்லாம் படம் நடிக்க முடியாது!.. விஜயை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்!..
தமிழ் சினிமாவில் கமல் , ரஜினிக்கு பிறகு அடுத்த படியாக அதிக ரசிகர்களையும் செல்வாக்குகளையும் கொண்ட நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். இருவருமே சமகாலத்து நடிகர்கள். அதாவது ஒரே நேரத்தில் ஒன்றாக சினிமாவிற்குள் வந்தவர்கள்.
ஏராளமான வெற்றி தோல்விகளை சரிசமமாக பார்த்தவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் தான் ஒன்றாக சேர்ந்து நடித்தார்கள். அதன் பின் தனித்தனியே வழியை அமைத்துக் கொண்டு தனி டிராக்கில் பயணிக்க தொடங்கினர்.
இருவருக்குமே உயிரைக் கொடுக்கும் ரசிகர்கள் பலம் இருக்கின்றன. இன்றைய சூழலில் இருவருக்குமே கடுமையான போட்டிகள் தொழில்முறையில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.ஆனால் பர்ஷனலாக அதை அவர்கள் கொண்டு சென்றதில்லை.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் விஜய் படம் ஒன்றில் நடிக்க இருந்து வேண்டாம் என சொன்னதாக ஒரு தகவல் வைரலாகி கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘தமிழன்’ திரைப்படம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார்.
ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யா ராயாம். ஆனால் ஐஸ்வர்யா ராய் விஜய் வேண்டாம், அவர் சின்னப் பையன் மாதிரி தெரிகிறார், எனக்கு ஜோடியாக பொருத்தமாக இருக்காது, அஜித் மாதிரி வேற யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி அந்த பட வாய்ப்பை தட்டிக் கழித்தாராம் ஐஸ்வர்யா ராய்.
இதே போன்ற நிலைமை தான் அஜித்திற்கும். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் அப்போது அஜித் ஒரு வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இருந்ததால் அஜித்துடன் ஜோடி சேர மறுத்தாராம் நம்ம உலக அழகி. இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறினார்.