லண்டனில் இருந்து இதுக்காக தான் அஜித் வந்தாரா.?! வைரல் வீடியோவால் கடுப்பான AK படக்குழு.!

by Manikandan |
லண்டனில் இருந்து இதுக்காக தான் அஜித் வந்தாரா.?! வைரல் வீடியோவால் கடுப்பான AK படக்குழு.!
X

வலிமை படத்தை தொடர்ந்து போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றார். தாற்காலியமாக இப்படத்திற்கு 'AK 61' பெயரிடப்பட்டுள்ளது, இப்பொது, இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் தீபாவளி ரிலீஸாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாகும் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், படத்தின் பெரும்பகுதியில் அஜித்தின் காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டது. இதன் காரணமாக தனது போர்ஷனை முடித்த அஜித் லண்டனுக்கு தனது பைக் பயணத்தை முடித்துவிட்டு தற்போது, சென்னை திரும்பியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் எடுக்கப்பட்ட அஜித்தின் பலவிதமான போட்டோக்கள் இணையத்தில் அவ்வபோது வெளியாகி வைரலாகி வந்தன.

ஏற்கனவே, இந்த படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது என முன்பே கூறப்பட்டது. அதன்படி, சமீபத்தில் கூட இப்படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பேங்க் செட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்தது. தற்போது, சமூக வலைதளத்தில் அஜித்தின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்களேன்- தீவிரமான யோசனையில் ‘வாத்தி’ தனுஷ்.! இந்த படமாவது கைகொடுக்குமா ஏக்கத்தில் ரசிகர்கள்.!

இது குறித்த உண்மை என்னவென்று தெரியவந்துள்ளது. அதாவது, லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அஜித் இன்று திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்றுள்ளார். மேலும், 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவர் பங்கேற்றது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், லண்டனில் இருந்து வீடு திரும்பிய அஜித் தனது அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்லுவார் என அவரது ரசிகர்கள் சந்தோசமாக இருந்தன.

ஆனால், இப்பொது இவர் இதுக்காகத்தான் சென்னை வந்தாரா என்று தனது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளார். மேலும், அஜித்தின் கெட்டப் மற்றும், அவரது தமிழக வருகையை ரகசியமாக வைக்க நினைத்த படக்குழுவுக்கு இந்த வீடியோ வெளியாகி வைரலானது சற்று கடுப்பேற்றியுள்ளதாம்.

Next Story