Vijay TVK: விஜய் கட்சியில் இணைந்தாரா பிரபல நடிகை? வைரலாகும் வீடியோவைப் பாருங்க..!

vijay
தளபதி விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தார். கடைசி படம் தளபதி 69 தான் என்றும் அதன்பிறகு அரசியலில் முழுநேரமாக ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.
ஆட்சி அதிகாரத்திலும் பங்கு
கையோடு பலரும் வியக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்து விட்டார். இந்த மாநாடு அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரிய சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக கட்சியுடன் இணைந்து கூட்டணி போட வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு உண்டு என்று தெரிவித்தார்.
இது பல கட்சிகளுக்கு இடையே ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகளை விஜய் கட்சி எளிதில் கவர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் விஜயை அதிகமாக விமர்சித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இலக்கு 2026
தனது இலக்கு 2026ல் முதல்வர் ஆவதுதான் என்ற ஒரே குறிக்கோளுடன் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக கட்சியின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார். கட்சி மாநாடு நடந்தபோது லட்சக்கணக்கில் திரண்ட கூட்டம் பல பெரிய கட்சிகளையே ஆச்சரியப்பட வைத்தது.
யாருடன் கூட்டணி?
திமுகவைத் தன் எதிரி என வெட்டவெளிச்சமாகப் போட்டுத் தாக்கிய விஜய் அதிமுகவைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. அதனால் இபிஎஸ் உடன் கூட்டணி இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதுவும் கிடையாது என்று சமீபத்தில் விஜய் மறுத்து விட்டார். அடுத்தடுத்து அரசியலில் எந்த மாதிரியான காய்களை அவர் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கட்சிகளுக்கான நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது விஜய் கட்சியில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. காட்சியைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.
ஜாலியோ ஜிம்கானா - அபிராமி

actress abirami
விருமான்டி படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை அபிராமி. இவர் ஜாலியோ ஜிம்கானா படத்தின் முன் வெளியீட்டு விழாவுக்கு வருகிறார். அப்போது அவர் வந்தக் காரில் தவெக கட்சிக் கொடி பறந்தது. இதனால் விஜய் கட்சியில் சேர்ந்து விட்டாரோ என்று சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண...
தவெகவில் இணைந்தாரா பிரபல நடிகை? தவெக கொடி பறக்கும் காரில் வந்து இறங்கி ஷாக் கொடுத்த காட்சி#tvk #tvkvijay #thanthitv pic.twitter.com/W51wjksefq
— Thanthi TV (@ThanthiTV) November 19, 2024