தமிழ்சினிமாவில் ஜெயித்ததா டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்?

by sankaran v |
தமிழ்சினிமாவில் ஜெயித்ததா டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்?
X

தமிழ்சினிமாவில் அந்த காலத்தில் இருந்தே டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வந்துள்ளன. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி தான் நமக்கு தெரிந்த முதல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.

அதன்பின்னர் ரஜினியும் கமலும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சத்யராஜ், பிரபு ஆகியோர் இணைந்து நடித்த படங்கள் வந்துள்ளன. கார்த்திக், பிரபு இணைந்து நடித்த படங்கள் வந்துள்ளன. இவற்றில் சில படங்களைப் பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம்

Prabhu and Karthick, Nathiya in Akni Natchatram

இந்தப்படத்தில் கார்த்திக், பிரபு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் மெகா ஹிட். 1988ல் வெளியான இப்படத்தை மணிரத்னம் இயக்கினார். பிரபு, கார்த்திக் உடன் அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். நின்னுக்கோரி வர்ணம், ஒரு பூங்காவனம், ராஜா ராஜாதி ராஜனில்லே, ரோஜாப்பூ ஆடி வந்தது, தூங்காத விழிகள், வா வா அன்பே ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இளமை ஊஞ்சலாடுகிறது

1978ல் வெளியான இப்படத்தை ஸ்ரீதர் இயக்கினார். கமல், ரஜினி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சந்தானபாரதி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வெற்றி நடைபோட்டது. என்னடி மீனாட்சி, ஒரே நாள் உன்னை நான், கிண்ணத்தில் தேன் வடித்து, நீ கேட்டால் நான், தண்ணி கருத்திருச்சு ஆகிய பாடல்கள் உள்ளன.

சின்னத்தம்பி பெரிய தம்பி

1987ல் வெளியான இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். பிரபு, சத்யராஜ், நதியா, சுதா சந்திரன், நிழல்கள் ரவி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் ரகங்கள். சின்னத்தம்பி, பெரிய தம்பி, என் பாட்ட கேட்டா, மாமன் பொண்ணுக்கு, மழையின் துளியிலே, ஒரு ஆல மரத்துல, ஒரு காதல், யா யா ஆகிய பாடல்கள் உள்ளன.

தளபதி

Rajni and Mammootty in Thalapathy

1991ல் வெளியான படம். மணிரத்னம் இயக்கினார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெய்மறக்க வைக்கும் ரகங்கள். ரஜினிகாந்த், மம்முட்டி இணைந்து நடித்த படம். இவர்களுடன் அரவிந்த்சாமி, ஷோபனா, பானுப்பிரியா, அம்ரீஷ்பூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

யமுனை ஆற்றிலே, ராக்கம்மா கையத்தட்டு, சுந்தரி கண்ணால், காட்டுக்குயிலு, புத்தம் புது பூ, சின்னத்தாயவள், மார்கழி தான் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் ஆனது.

அன்பே சிவம்

2003ல் வெளியான இந்தப்படத்தை சுந்தர்.சி. இயக்கினார். கமல், கதை, திரைக்கதை எழுதி நடித்துள்ளார். மதன் வசனம் எழுதிய படம் இதுதான். கமலுடன் இணைந்து மாதவன் நடித்துள்ளார்.

உடன் கிரண், நாசர், சந்தானபாரதி, யூகி சேது உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் வித்யாசாகர். அன்பே சிவம், ஏலே மச்சி, மௌனமே பார்வையாய், பூ வாசம், நாட்டுக்கொரு சேதி ஆகிய பாடல்கள் உள்ளன.

பிரண்ட்ஸ்

Vijay, Surya, Devayani in Friends

2001ல் வெளியான இப்படத்தை சித்திக் இயக்கினார். விஜய், சூர்யா இருவரும் இணைந்து நடித்த படம். இவர்களுடன் ரமேஷ் கண்ணா, வடிவேலு, ராதாரவி, தேவயானி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் வடிவேலுவின் காமெடி அருமையாக இருக்கும்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. தென்றல் வரும், குயிலுக்கு கூ கூ, ருக்கு ருக்கு, மஞ்சள் பூசும், பெண்களோட போட்டி, பூங்காற்றே, வானம் பெருசுதான் ஆகிய பாடல்கள் உள்ளன.

இதே போல் உல்லாசம் படத்தில் அஜீத், விக்ரமும், காதலா காதலா படத்தில் கமல், பிரபுதேவாவும், உன்னைப்போல் ஒருவனில் கமல், மோகன்லாலும் நடித்துள்ளனர். இவை அனைத்தும் வெற்றிப்படங்கள் தான்.

பொதுவில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றதுமே இருதரப்பு ரசிகர்களும் ஆர்வத்துடன் வந்து படம் பார்க்க வருவர். அதனால் தான் படம் வெற்றி பெறுகிறது.

Next Story