Cinema History
எம்.எஸ்.வி.யை காப்பி அடித்தாரா இளையராஜா? இசையில் எவ்வளவு சேட்டைன்னு பாருங்க…!
ஒரு பாட்டோட தாக்கத்துல இன்னொரு பாட்டு வருமான்னா கண்டிப்பா வரும். அந்த வகையில் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.யின் ஒரு பாடலோட தாக்கத்தில் அதே மெட்டை வைத்து ஒரு படத்தில் இளையராஜா 2 பாடல்களைப் பண்ணினார். அந்தப் பாட்டு பெரிய வெற்றியை அடைந்தது. அது என்னன்னு பார்க்கலாமா…
1986ல் ஏவிஎம் தயாரிப்பில் ‘மெல்லத்திறந்தது கதவு’ படம் வெளிவந்தது. இந்தப் படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ளார். மோகனின் படங்கள் என்றாலே பாடல்கள் ஹிட்டு தான்.
அந்த வகையில் இந்தப் படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு எம்எஸ்.வி.யும், இளையராஜாவும் இணைந்து இசை அமைத்தனர். இளையராஜா மெல்லிசை மன்னரிடம் கேட்கிறார். அண்ணே உங்க குருநாதர் சி.ஆர்.சுப்பராமன் சண்டிராணி படத்தில் வான் மீதிலே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி பண்ணிக் கொடுங்கன்னு கேட்கிறார்.
பானுமதியும், கண்டசாலாவும் பாடியிருப்பாங்க. அந்தப் பாடலை நான் தான் பண்ணினேன் என்கிறார் எம்எஸ்.வி. ஏன்னா அந்தக் காலகட்டத்தில் சண்டிராணி பட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கும்போது பாதி படம் உருவாகும்போதே இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இறந்து போயிடுறாரு.
அதுக்குப் பிறகு இந்தப் பாடல், பின்னணி இசை எல்லாமே எம்எஸ்.வி. தான் பண்ணினார். அந்தப் பாடல் பஹாரி ராகம்.
அந்த வகையில் மெல்லத்திறந்தது கதவு படத்தில் அதே பஹாரி ராகத்தில் போடுகிறார். அதுதான் ‘வா வெண்ணிலா’ பாடல். அதே டெம்போவில் துள்ளலாக எஸ்பிபியும், எஸ்.ஜானகியும் பாடியிருப்பாங்க. இன்னொன்னு ஒரு விழா நடக்கும். அங்கு இஸ்லாமிய பெண் பாடுவது போல எஸ்.ஜானகி மட்டும் பாடுவாங்க. எஸ்.பி.பி. துள்ளலில் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பாங்க. அதே போல இஸ்லாமிய பெண் போல அழகாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலைப் பாடியவர் கவிஞர் வாலி. ‘முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும், திரை போட்டு உன்னை மறைத்தாலும் பாவம். ஒரு முறையேனும் திருமுகம் காணும் வரம் தர வேண்டும் எனக்கது போதும். உனைச்சேர எதிர்பார்த்து முன் ஏழு ஜென்மம் ஏங்கினேன்’ என அழகான வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த வரிகளுக்குள் ஜானகி ‘ஆஹா’ ‘ஏஹே’ என இடையிடையே ஹம்மிங், புல்லாங்குழல் என பாடலை ரம்மியமாக உருவாக்கி இருப்பார் இளையராஜா.
அதே போல பெண் மட்டும் பாடும் பாடலில் இடையிசையின் போது கஜல் போட்டு அசத்தியிருப்பார் இளையராஜா. 2வது இடையிசையில் நய்யாண்டி மேளத்தையும் கொண்டு வந்து சேட்டை செய்திருப்பார் இளையராஜா. இது நம்மை வேறு லெவலுக்குக் கொண்டு செல்லும். இப்போது கவனித்துப் பார்த்தால் அந்த வான் மீதிலே பாடலும், வா வெண்ணிலா பாடலும் நன்றாக ஒத்துப்போகும்.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.