Connect with us
banner

ரஜினிக்கு சொன்ன கதையை ஆட்டையைப் போட்டாரா ஆண்டவர்? நடந்தது என்ன?

Cinema News

ரஜினிக்கு சொன்ன கதையை ஆட்டையைப் போட்டாரா ஆண்டவர்? நடந்தது என்ன?

திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கோலமாக கடந்த இரு வாரங்களாக சக்கைப் போடு போட்டு வரும் விக்ரம் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை உலகளவில் நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் அள்ளிய படமாக விக்ரம் மாறி உள்ளது.

நடிகராக கமல் பாராட்டுக்களை அல்ல, தயாரிப்பாளராக பெரும் தொகையை லாபமாக ஈட்டி உள்ளார். இதுவரை ஏகப்பட்ட படங்களை ராஜ்கமல் பேனரில் தயாரித்துள்ள கமல் பலமுறை நஷ்டம் அடைந்த கதைகள் தான் ஏரளமாம்.

இந்நிலையில், விக்ரம் இப்படியொரு வெறித்தனமான வெற்றியை பதிவு செய்ய அதுதான் காரணமாக இருக்குமா? என்கிற கேள்வி ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது.

மாஸ்டர் படத்தின் கதை நம்மவர் சாயலில் இருந்ததால் அதற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்கிற பயத்தில் தான் கமலை சந்தித்து அந்த படத்தின் உரிமையை வாங்க முதல்முறை சென்றாராம் லோகேஷ் கனகராஜ்.

அங்கே சென்றவர் தான் ஒரு தீவிர கமல் பக்தர் என்பதை அவரிடமே நேரடியாக சொல்ல, லோகேஷின் கதையை கேட்டு பூரித்துப் போய்விட்டாராம் ஆண்டவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கதை ரெடி பண்ணியிருக்கிறேன் என்று சொன்னதும், லோகேஷ் கனகராஜின் திறமையை நம்பி அந்த படத்தை நம்ம பேனரிலேயே தயாரித்து விடலாமே என யோசித்து பலே திட்டத்தை கமல் போட கமலின் நட்புக்காக அந்த படத்தில் நடிக்க ரஜினியும் ஒப்புக் கொண்டாராம்.

ஆனால், விஜய் டிவி மகேந்திரனின் டர்மரிக் மீடியா சார்பில் தான் படம் உருவாக போறதை அறிந்து கொண்ட ரஜினிகாந்த், அந்த புராஜெக்டில் இருந்து பின் வாங்கி விட்டாராம்.

அதன் பிறகு தான் கமலுக்கு படம் பண்ண புக் ஆகி விக்ரம் படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், சூப்பர்ஸ்டாருக்கு சொன்ன கதை வேறு என்றும் அவசரகதியில் கைதி 2வுக்கு எழுதி வைத்திருந்த கதையில் கமல்ஹாசனை இணைத்து இப்படியொரு படத்தை உருவாக்கி ஹிட்டும் கொடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்ரம் படம் இப்படியொரு வசூல் வேட்டையை நடத்தி வருவதை பார்த்த சூப்பர்ஸ்டார், அண்ணாத்த படம் பண்றதுக்கு பதிலா லோகேஷ் கூட இணைந்து பண்ணியிருக்கலாமே என நினைத்து அவரை வெகுவாக பாராட்டி உள்ளாராம். நெல்சன் படம் முடிந்ததும் ரஜினி – லோகேஷ் கூட்டணி அமைய நிறையவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top