Connect with us

Cinema News

O2 படம் ஓடாததுக்கு காரணமே நயன்தாரா தானா?…அட இப்படி மாறிட்டாரே லேடி சூப்பர்ஸ்டார்!….

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான O2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணமே நடிகை நயன்தாரா தான் என தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

கதைப்படி நல்ல படமாகவே O2 வந்திருக்க வேண்டும் என்றும் ஸ்க்ரீனில் பார்க்கும் போது தான் ஏகப்பட்ட ஓட்டைகள் படத்தை கெடுத்து விட்டன என விமர்சகர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான பல படங்கள் ஹிட் அடிக்க தவறி வருவது தனிக் கதை. அவர் சோலோ ஹீரோயினாக நடித்த நெற்றிக்கண் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி வெற்றிப் பெறவில்லை.

முன்னதாக ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.

O2 படத்தின் கதைப்படி மணல் சரிவில் சிக்கிக் கொள்ளும் பேருந்துக்குள் மணல் எல்லாம் வந்து விழுவது போல இயக்குநர் செம த்ரில்லாக கதை எழுதி இருந்தாராம். ஆனால், மேக்கப் கூட கலையாமல் தான் நடிப்பேன் என நயன்தாரா போட்ட கண்டிஷன் தான் அந்த படமே புதைகுழியில் சிக்கிக் கொள்ள காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

எங்கேயும் எப்போதும் மற்றும் அறம் படங்களின் கலவையாகவே இந்த படம் இருந்த போதிலும் அந்த படங்களில் இருந்த ஒரு விறுவிறுப்பு மற்றும் சீட் எட்ஜ் த்ரில்லர் அனுபவம் இல்லாமல், கடைசி வரை நயன்தாரா செம கேஷுவலாக அந்த படத்தில் எப்படித் தான் நடித்தாரோ என விமர்சகர்கள் விளாசி வருகின்றனர்.

திருமண ஜோரில் இருந்த நிலையில், இந்த படத்துக்கு புரமோஷன் கூட நயன்தாரா செய்யவில்லை என்றும் தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆகி வரும் நிலையில், சீக்கிரமே நடிப்பதையும் கை விட்டு விடுவாரா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடிப்பில் நயன்தாராவை சமந்தா ஓவர்டேக் செய்து விட்டார் என அந்த படம் வெளியான போதும் ரசிகர்கள் கதிஜா ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ததில் இருந்தே தெளிவாக தெரிந்தது என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top