'தொடையழகி’ ரம்பா மனசுக்குள்ள அந்த ஆசை இன்னும் இருக்கு!.. ஆனால், அதுக்கு ஹஸ்பன்ட் அனுமதிப்பாரா?..
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மர்லின் மன்ரோ போல கவுனையெல்லாம் பறக்கவிட்டு தனது தொடையழகை காட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஜொள்ளு விட வைத்தவர் நடிகை ரம்பா.
தெலுங்கில் அறிமுகமான இவர், அதன் பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாகவும், செகண்ட் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ், கார்த்தி, முரளி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
2003ம் ஆண்டு பிரபுவின் பந்தா பரமசிவம் படத்தில் நடித்த ரம்பா அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காமல், சத்திரபதி, சுக்கிரன் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்சராக ஆடிச் சென்றார்.
2010ம் ஆண்டு கடைசியாக கலைஞர் கருணாநிதி கதையில் உருவான பெண் சிங்கம் படத்தில் நடித்த ரம்பா அதே ஆண்டு ஆந்திராவை சேர்ந்த இந்திரன் பத்மநாபன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.
நயன்தாராவுக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற போவதாக கூறப்பட்டு கடைசி நேரத்தில் இடம் மாறியாது. ஆனால், ரம்பா திருப்பதியில் தான் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த ரம்பா, நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று கடைசி வரை அனைத்து இறுதி சடங்கிலும் கூடவே இருந்தார்.
பார்த்திபன் நடித்த உன்னருகே நானிருந்தால் படத்தில் “சார் ரம்பா சார்” என காமெடி வருமே அந்த படத்தில் தான் மீனாவும் ரம்பாவும் சேர்ந்து நடித்திருப்பார்கள்.
மீனாவின் கணவருக்கு இறுதி மரியாதை செலுத்தி முடித்த நடிகை ரம்பா, தனது குழந்தைகளுடன் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான யானை படத்தை தியேட்டரில் அருண் விஜய்யுடன் சென்று பார்த்துள்ளார்.
அந்த படத்தை பார்த்த ரம்பா, படம் ரொம்ப சூப்பரா இருக்கு, அருண் விஜய் அசத்திட்டாரு என பாராட்டி இருந்தார்.
அப்போது சில யூடியூபர்கள், மறுபடியும் நடிக்க வருவீங்களா எனக் கேட்டதுக்கு, சிரித்துக் கொண்டே, ரம்பா, குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருக்கேன். வேறு எந்த ஐடியாவும் இப்போதைக்கு இல்லை என பேசி உள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகினாலும், ஜோடி நம்பர் ஒன், எனிபடி கேன் டான்ஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக ரம்பா இருந்துள்ளார். ஆனால், மீண்டும் அவரை சினிமாவில் நடிக்க அவரது கணவர் அனுமதிப்பாரா? மாட்டாரா? என்பது தெரியவில்லை என்கின்றனர்.