அருகருகே இருந்தும் திரும்பிக் கூட பார்க்கமல் சென்ற சமந்தா -நாகசைதன்யா!!

by ராம் சுதன் |
samantha
X

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து, வளர்ந்தவாரன இவர் 'மாஸ்க்கோவின் காவிரி' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

தமிழைப்போலவே தெலுங்கிலும் இவர் மகேஷ் பாபு, பவன் கல்யாண் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பின் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

samantha
samantha

தற்போது படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. விவாகரத்திற்குப் பின் அதீத கவர்ச்சி காட்டி சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் 'ம் சொல்றியா மாமா' என இவர் ஆடிய ஐட்டம் பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது.

சினிமாவில் பிசியாக நடித்துவரும் இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர். அதே இடத்தில் அருகே நாக சைதன்யா கலந்துகொண்ட ஒரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இருவரும் அருகருகே இருந்தும் ஒருவரை ஒருவர் சந்திக்க வில்லையாம்.

samantha

படப்பிடிப்பு முடிந்ததும் இருவருமே தங்கள் காரில் ஏறி அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டனராம். டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் அனைவரும் தற்போது இதைத்தான் முணுமுணுத்து வருகின்றனர்.

Next Story