சிம்ரன் சொன்ன அந்த ‘டப்பா’ ரோல் நடிகை யாரு?.. ஒருவேளை அவங்களா இருக்குமோ?.. சிண்டு முடிந்த ஃபேன்ஸ்!

by Saranya M |
சிம்ரன்
X

நடிகை சிம்ரன் ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல படங்களில் தூள் கிளப்பிய நிலையில், இன்று வரை அவரை போல ஒரு நடிகை வர முடியாது என சொல்லும் அளவுக்கு குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா அருகே கொஞ்சம் சீனில் அவர் வந்த போது கூட த்ரிஷாவையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

சமீபத்தில் பெண் பிரபலங்களை கவுரவிக்கும் விழா ஒன்றில் சிம்ரன் கலந்துக் கொண்டு விருது பெற்ற நிலையில், சக நடிகை தன்னை ஆன்டி ரோலில் நடிப்பதை கிண்டலாக பேசியது குறித்து வெளிப்படையாக பேச அரங்கில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நடிகை ஒருவருக்கு சமீபத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தேன் என டெக்ஸ்ட் பண்ணேன். அவர் உடனே எனக்கு ரிப்ளையாக ஆன்ட்டி ரோலில் நடிப்பதற்கு இப்படி நடிக்கலாம் என்றார். ஆன்ட்டி ரோலில் நடிப்பதோ நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதிலோ எந்தவொரு கேவலமும் இல்லை. அதற்கு பதிலாக டப்பா ரோலில் நடிக்காமல் இருக்கலாம் என்றேன் என்றார்.

’டப்பா’ என சிம்ரன் குறிப்பிட்ட உடனே நடிகை ஜோதிகா இந்தியில் டப்பா கார்ட்டெல் வெப்சீரிஸில் நடித்ததை குறிப்பிட்டே சிம்ரன் சூசகமாக சொல்லியிருக்கிறார் என ஜோதிகாவை நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகை லைலாவுடன் சப்தம் படத்தில் சிம்ரன் நடித்திருந்தபோது தான் இந்த பிரச்சனை வெடித்தது என்றும் கூறுகின்றனர். விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த் ஜோடியாக டம்மி ரோலில் லைலா நடித்ததை தான் சிம்ரன் கிண்டல் செய்ய பதிலுக்கு அவர் சிம்ரனை இப்படி பேசினார் என்று கூறுகின்றனர். நடிகை த்ரிஷாவின் பெயரும் இதில் அடிபட்டு வருகிறது.

Next Story