சொந்தப்படங்கள் எடுத்து வெற்றி பெற்ற நடிகர்களும் உண்டு. தோல்வி அடைந்த நடிகர்களும் உண்டு. இங்கு தரப்பட்ட லிஸ்டில் எந்த நடிகர்கள் மீண்டும் மீண்டும் சொந்தப் படங்கள் எடுக்கவில்லையோ அவர்கள் தோல்வி அடைந்தவர்களாக இருப்பார்கள்.
அப்படி இல்லாமல் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருபவர்கள் சொந்தப் படம் எடுத்து வெற்றி பெற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இங்கு வெற்றியை விட தோல்வியே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். படங்கள் என்னென்ன என்று பார்க்கும்போதே நமக்குத் தெரிந்து விடும். அப்படி யார் யார் என்னென்ன படங்களை எடுத்து வெற்றி பெற்றார்கள் என்பதைப் பார்க்கலாமா…
இதையும் படிங்க… ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை பங்கமாய் கலாய்த்த அஜித்!. செம நக்கல் பிடிச்சவரு போல!…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் நாடோடிமன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அரசகட்டளை ஆகிய படங்களை சொந்தமாகத் தயாரித்து அசத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது சொந்த நிறுவனமான சிவாஜி பிக்சர்ஸ் சார்பில் புதிய பறவை, திரிசூலம் உள்பட பல படங்களை சொந்தமாகத் தயாரித்தார். ரஜினி மாவீரன், வள்ளி, படையப்பா, அருணாச்சலம் ஆகிய படங்களை சொந்தமாகத் தயாரித்தார்.
உலகநாயகன் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜபார்வை, அபூர்வசகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ், ஹேராம், தூங்காவனம், விக்ரம் உள்பட பல படங்களை சொந்தமாகத் தயாரித்தார்.
இவற்றில் தோல்வியும், வெற்றியும் கலந்தே வந்தன. ஆனால் அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து பல சோதனை முயற்சிகளை எடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
நடிகர் விஜயகாந்த் அவரது நண்பர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் பெயரில் உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை ஆகிய படங்களை சொந்தமாகத் தயாரித்தார்.
நடிகர சத்யராஜ் அவரது மேனேஜர் ராமநாதன் பெயரில் ராஜ்பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், தமிழ் செல்வன் ஆகிய படங்களை சொந்தமாகத் தயாரித்தார்.
நடிகர் பிரபு சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜகுமாரன், மைடியர் மார்த்தாண்டன், வெற்றி விழா, சந்திரமுகி ஆகிய படங்களைத் தயாரித்தார். நடிகர் சரத்குமார் தனது மேனேஜர் சுந்தரேசன் பெயரில் ஏஎன்எஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ரகசிய போலீஸ் 100, கண் சிமிட்டும் நேரம் ஆகிய படங்களைத் தயாரித்தார். நடிகர் விஜய் விஜே பிலிம்ஸ் சார்பில் நெஞ்சினிலே, நிலாவே வா ஆகிய சொந்தப் படங்களைத் தயாரித்தார்.
மேற்கண்ட லிஸ்டில் எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல், பிரபு ஆகியோர் சொந்தமாகத் தயாரித்து வெற்றி கண்டவர்கள் என்று சொல்லலாம்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…