காஜலின் ‘அந்த’ விடியோவை வெட்டி தூக்கிட்டீங்களா.!? எங்களுக்கு கொஞ்சம் அத காட்டுங்கயா..!

Published on: April 27, 2022
---Advertisement---

தமிழ் ,  தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து நீண்ட வருடங்கள் தனது இடத்தை தக்கவைத்து நடிகை காஜல் அகர்வால். தமிழில் துப்பாக்கி, மாற்றன் , மகதீரா என பல பிரமாண்ட படங்களில் நடித்து உள்ளார்.

kajal agawal

இவர் கொரோனா காலத்திற்கு முன்னரே ஆச்சார்யா , இந்தியன் 2 ஆகிய படஙக்ளில் கமிட் ஆகி,  முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து  கொண்டார். இந்த படங்களில் படப்பிடிப்பு கொரோனா காலமாக நீண்டு கொண்டே சென்றது.

kajal dp

இந்த சமயத்தில் காஜல்அகர்வால் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு அண்மையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கொரோனா  காலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட சிரஞ்சீவி நடித்து வந்த ஆச்சாரியா படத்தில் இவரும் ஒரு நாயகியாக கமிட்டாகி இருந்தார். கொரோனாவிற்கு முன்னதாக இவரது பட காட்சிகள் படமாக்கப்பட்டன. இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் காஜல் தனது திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டதால் இந்த படத்தின் சூட்டிங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

இறுதியில் படத்தை பார்த்த படக்குழுவிற்கு திருப்தி இல்லையாம். ஆதலால் காஜல் அகர்வால் நடித்து வந்த அந்த துரு துரு காட்சிகளை மொத்தமாக நீக்கிவிட்டு, காஜல் நடிகை நடக்காதது போல் இதில் மீதி படத்தை காட்டி விட்டனராம்.

இதனால், காஜல் ரசிகர்கள் தற்போது படக்குழு மீது கோபத்தில் உள்ளனராம். தங்கள் விருப்ப நாயகி நடித்துள்ள அந்த காட்சிகளை நீக்கப்பட்ட காட்சி வரிசையிலாவது அதனை இணையத்தில் வெளியிடுங்கள். என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு படக்குழு அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment