Categories: Cinema History Cinema News latest news

ரஜினிகாந்த் என்ற பெயர் யாருடையது தெரியுமா?.. கே.பாலசந்தர் ஏன் வைத்தார் தெரியுமா?..

ஒரு பேருந்து நடத்துனராக இருந்த சிவாஜி ராவை ரஜினிகாந்த் என்ற பெயரை கொடுத்து இன்று சூப்பர் ஸ்டாராக ஆக்கிய பெருமை இயக்குனர் கே.பாலசந்தரையே சாரும். சாதாரண மனிதராக இருந்த சிவாஜி ராவை வழிப்போக்கர்களில் ஒருவனாக பார்த்த பாலசந்தர் அந்த முதல் பார்வையிலேயே ஈர்க்கப்பட்டார்.

rajini1

அதன் பின் அபூர்வ ராகங்கள் படத்திற்காக ரஜினியை அழைத்து தமிழையும் கற்றுக் கொள் என்று கூறி அந்தப் படத்தில் நடிக்க வைத்தார். மேலும் ஒரு ஹோலிப் பண்டிகை தினத்தில் சிவாஜி ராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றினார் பாலசந்தர். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் வரும் ஹோலிப்பண்டிகை தினத்தில் ரஜினியை தன் வீட்டிற்கு வரச் சொல்லி கேக் வெட்டில் மகிழ்வாராம் ரஜினி.

இதையும் படிங்க : “தகடு தகடு”… செம ஃபேமஸ் ஆன சத்யராஜ் வசனம் உருவானது எப்படி தெரியுமா??

இப்படி ஒருவருக்கு சாதாரணமாக சுரேஷ், கார்த்திக், மணி என பழகிப்போன பெயர்களை வைப்பார்கள். ஆனால் கே.பாலசந்தர் வித்தியாசமாக ரஜினிகாந்த் என வைக்கக் காரணம் ஏற்கெனவே இந்த ரஜினிகாந்த் என்ற பெயரை தன் நாடகத்திலும் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை.

rajini2

1966 ஆம் ஆண்டு மேஜர் சுந்தராஜன், நாகேஷ், ஜெயலலிதா, முத்துராமன், ஏ.வி.எம். ராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் தான் மேஜர் சந்திரகாந்த். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்தவர் மேஜர் சுந்தரராஜன். அவர் ஒரு ஓய்வு பெற்ற கண் தெரியாத மேஜராவார்.

அவருக்கு இரு மகன்கள். அவர்களில் மூத்த மகனான முத்துராமன் ஸ்ரீகாந்த் என்ற கதாபாத்திரத்திலும் இரண்டாவது மகனான ஏ.வி.எம். ராஜன் ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இதே படம் தான் முதலில் நாடகமாக அரங்கேறியது. நாடகத்தில் கிடைத்த புகழ் தான் படமாக எடுத்தார் பாலசந்தர்.

major sundarajan

படமும் கமெர்சியலாக வெற்றியடைந்தது. பல விருதுகளையும் பெற்றது. அதனால் தான் இந்த படத்தில் பயன்படுத்திய ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தின் பெயரைத்தான் ரஜினிக்கு சூட்டி மகிழ்ந்திருக்கிறார் கே.பாலசந்தர்.

Published by
Rohini