ஸ்ரீதேவியுடன் முதல் டூயட்!...ஆசையாக வந்த ரஜினிக்கு அல்வா கொடுத்த ஸ்ரீதேவி..என்ன படம் தெரியுமா?..
முதன் முதலாக ஜோடியாக ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இணைந்த நடித்த படத்தின் ஒரு பாடலில் அவருடன் டூயட் ஆடி பாட ஆசையாக வந்த ரஜினிகாந்திற்கு பல்ப் கிடைத்தது தான் மிச்சம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஸ்ரீதேவியின் வளர்ச்சி:
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் கொடிக்கட்டி பறந்த காலத்தில் காலடி எடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் காலடியினை அழுத்தமாகவே எடுத்து வைத்தவர். அவரை போலவே ஸ்ரீதேவி கதாநாயகியாக திரையுலகில் அடி எடுத்து வைத்தபோது காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா என எண்ணற்ற நாயகிகளுக்கு பெரிய ஆதரவு இருந்தது. அவர்கள் மட்டுமல்லாமல் 80ஸ் நாயகிகளும் வரவும் அதிகரித்திருந்தது. அப்போது தனக்கான இடத்தினை பிடிக்க ஸ்ரீதேவி வெகுவாக போராடினார்.
தர்மயுத்தம் படப்பிடிப்பு:
வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக இணைந்து நடித்த முதல் படம் தர்மயுத்தம். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர். டி. ஆர். ஸ்ரீநிவாசன் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
படத்தின் எல்லா படப்பிடிப்பை முடித்ததும் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருந்தது. இந்த நேரத்தில் தான் ஸ்ரீதேவிக்கு விபத்து ஒன்றில் கால்முறிவு ஏற்பட்டதாம். படக்குழுவிற்கு இது அதிர்ச்சியாக இருந்ததாம். மொத்த காட்சிகளும் முடிந்த நிலையில் ஒரு பாடல் மட்டுமே முடியாமல் இருக்கிறது. இருந்தும், இயக்குனர் சக்தி, ஸ்ரீதேவி உடல் தேறியவுடன் இதை படமாக்கலாமா எனக் கேட்டார்.
ஆகாய கங்கை பாடல் படமாக்கிய விதம்:
ஆனால் ஸ்ரீதேவிக்கு இதில் உடன்பாடு இல்லையாம். கால் முறிவு ஏற்பட்ட எனக்கு, இது சரியாக 2 மாதத்துக்கும் மேல் ஆகும். அதுவரை படக்குழுவினரை காக்க வைக்க விருப்பமில்லை. நான் உடனே நடித்து கொடுக்கிறேன் எனக் கூறிவிட்டாராம். இயக்குனருக்கு எப்படி இருவருக்கும் டூயட் காட்சி வைக்க முடியும் என ஒரே குழப்பம். ஆனால் அதற்கும் ஒரு விடை கிடைத்தது.
ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி பொன் மான் விழி தேடி எனத் துவங்கும் அந்த பாடலில் முழுவதிலும் ஸ்ரீதேவி உட்கார்ந்தே நடித்திருந்தார். அவருக்கு சில க்ளோசப் காட்சிகள் இருந்தது. கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் பாடல் முழுவதையும் ஒரே நாளில் நடித்து கொடுத்தனர் இருவரும்.
அதில் ஸ்ரீதேவி எழுந்திருக்கும் காட்சியில் ரஜினிகாந்த் கையை கொடுத்து தூக்கி விடுவார். இன்னொரு காட்சியில் அவரை தூக்கி கொள்வார். இப்படியே ஸ்ரீதேவியின் கால்முறிவு இருப்பதை காட்டாமலே மொத்த பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது.