ராஜ்கிரண் படங்களில் இதையெல்லாம் நோட் பண்ணி இருக்கீங்களா? இதை மட்டும் மாத்தவே மாட்டாராம்...

by Akhilan |   ( Updated:2022-10-20 08:32:34  )
ராஜ்கிரண்
X

ராஜ்கிரண்

தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் முதலில் நடிகராக துவங்கவில்லை. ராமராஜன் நடித்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தான் சினிமாவிற்கு வந்தார். கஸ்தூரி ராஜாவின் முதல் திரைப்படமான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை தயாரித்து நடித்தார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியினை பெற்றது. தொடர்ச்சியாக அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தது. அவர் நடிப்பில் முக்கியமாக மாணிக்கம், அரண்மணை கிளி உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை பெற்றது.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்

31 வருடங்களில் ராஜ்கிரண் இதுவரை 35 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இதற்கு காரணமாக ஒரு படம் நடித்தாலும் நம் நடிப்பு பேசப்பட வேண்டும். சும்மா காசுக்காக நடிக்க கூடாது என்பதை லட்சியமாக வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் நாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று இருக்கிறது.

பொதுவாகவே சாப்பாட்டு பிரியரான ராஜ்கிரண் தனது பட விளம்பங்களிலும் அதை வைத்து ஒரு யுத்தியினை கையாண்டாராம். அதாவது அவர் எலும்பை கடிப்பது போல உள்ள காட்சியினை அன்றைய நாட்களில் கிராமங்களில் இருந்த ஹோட்டல்களில் ஒட்ட செய்து படத்திற்கு விளம்பரம் தேடி இருந்தார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டதாம்.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்

அதுமட்டுமல்லாமல், ராஜ்கிரண் படங்களில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் ஹீரோயின்கள் ஒரு பாணியினை கையாண்டார். அதாவது பெரும்பாலும் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர்களையே அந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்வாராம். இது அவருக்கு நல்ல வரவேற்பினை பெறவே உதவியாக இருந்தாக கூறப்படுகிறது.

Next Story