நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர், நடன கலைஞர், தயாரிப்பாளர், பாடகர் என தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் தன் கால்தடத்தை பதித்தவர் கமல்ஹாசன்.
ரஜினிகாந்திற்கு முன்பே கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பெறும் நட்சத்திரமாக இருந்தார் அதற்கு காரணம் அவர் அனைத்து துறைகளிலும் காட்டிய ஈடுபாடே ஆகும்.
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற பெரிய நடிகர்களே கமலஹாசனை பார்த்து வியக்கும் அளவிற்கு பல படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.அதில் எம்.ஜி.ஆருக்கே கமல்ஹாசன் நடனமாட கற்றுத் தந்த நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
தன்னுடைய தனி திறமையை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பு பெற்று வந்தவர் கமலல்ஹாசன். அதற்குப் பிறகு அவருடைய திறமையை வளர்த்துக் கொள்ள சினிமாவில் ஒவ்வொரு துறையின் மீதும் கவனத்தை செலுத்தி வந்தார்.
எம்.ஜி.ஆருக்கே டான்ஸ் மாஸ்டரான கமல்:
அப்படியாக நடனத்திலும் தனியாக கவனம் செலுத்தி வந்தார் இதற்காக பரதம் போன்ற பல நடன கலைகளை கற்றுக் கொண்டார். அப்போது தங்கப்பன் என்கிற டான்ஸ் மாஸ்டர் மிகவும் பிரபலமானவர். அவரிடம் சென்று உதவியாளராக சேர்ந்து கொண்டால் அதன் மூலம் நடனத்தை நல்ல முறையில் கற்றுக் கொள்ளலாம் என நினைத்தார் கமலஹாசன்.
அப்படியாக தங்கப்பனிடம் சேர்ந்து நல்ல முறையில் நடனத்தை கற்றுக் கொண்டார். அதன் பிறகு பல கலைஞர்களுக்கு தங்கப்பனுடன் சேர்ந்து இவரே நடனம் கற்றுக் கொடுத்துள்ளார். 1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த நீரும் நெருப்பும் திரைப்படம் வெளியானது.
நீரும் நெருப்பும் திரைப்படத்திற்கு தங்கப்பன்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார் அப்பொழுது உதவி டான்ஸ் மாஸ்டராக கமல்ஹாசன் இருந்தார் அதில் சில பாடல்களுக்கு சில நடனங்களை எம்.ஜி.ஆர்க்கு கமல்ஹாசன்தான் கற்றுக் கொடுத்துள்ளார். நீரும் நெருப்பும் படம் எடுத்த காலகட்டத்தில் கமல்ஹாசனின் வயது 17 மட்டுமே.
அப்போதே எம்.ஜி.ஆருக்கு நடனம் கற்றுத் தரும் அளவு கமல்ஹாசன் நடனத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். அந்த ஈடுபாடே கமல்ஹாசனை மூன்று தலைமுறையாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவே வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: தவறிப்போன சிறுமியை கையை பிடித்து தூக்கிய எம்.ஜி.ஆர்… பின்னாளில் வேற லெவலுக்கு போன நடிகை… யார் தெரியுமா?
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…