வலிமை திரைப்படத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்தது அஜித் இல்லையா?…அப்போ வேற யாரு?

Published on: April 24, 2022
---Advertisement---

போனி கபூர் தயாரிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்து வந்தது.

அஜித்தின் வலிமை திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.அஜித் ரசிகர்கள் அஜித்தின் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .

இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோ இணையதளம் ஓடிடி ரிலீசை பெற்றது.வலிமை திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு என்பதை தயாரிப்பாளர் போனி கபூரே அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

வலிமை திரைப்படத்தில் பலர் ரசித்த முக்கிய காட்சி என்றால் ஸ்டண்ட் காட்சிதான் இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

valimai

ஆனால் இந்த திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு அஜித்திற்கு டூப் போட்ட நபர் யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

ஸ்டண்ட் காட்சிகளை விஷால் என்ற நபர்தான் அஜித்திற்கு டூப் போட்டுள்ளார். வலிமை திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பலவற்றையும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Leave a Comment