More
Categories: Cinema History Cinema News latest news

கமல் அப்படி கேட்டதும் ஆடிப்போயிட்டேன்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவா இப்படி சொல்றாரு…?!

16 வயதினிலே படத்துக்கு முதலில் பாரதிராஜா வைத்த பெயர் மயில் தானாம். அந்தப் படம் குறித்த சுவாரசியமான அனுபவங்களை பாரதிராஜாவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஒரு நாள் அவரை அழைத்தாராம். உங்கிட்ட என்ன கதை இருக்குன்னு கேட்டாராம். அப்போது பாரதிராஜா 3 கதை சொன்னாராம். அதில் மயிலு கதை தான் அவரைக் கவர்ந்ததாம். உடனே அதை இயக்கும் பொறுப்பையும் பாரதிராஜாவுக்கேக் கொடுத்து விட்டாராம். அந்த இன்ப அதிர்ச்சியால் பாரதிராஜாவுக்கு ஒண்ணும் ஓடலையாம். சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு பாண்டி பஜாரில் பறந்தாராம். சௌகார் ஜானகி அம்மா சொன்ன மாதிரியே மூணே மாசத்துல டைரக்டர் ஆகிட்டோமேன்னு ஆச்சரியப்பட்டாராம்.

Advertising
Advertising

16 vayathinile

படத்தைக் கலர்ல தான் எடுக்கணும்னு ராஜ்கண்ணு சொல்லிவிட்டாராம். ஒளிப்பதிவாளர் நிவாஸ். ஆர் ஓ ல எடுத்துடலாம்னு சொன்னார். அது தான் கலர் பலிம். அப்போது பெங்களூருவில் இருந்து தான் பிலிம் வர வேண்டும். படம் நடிக்க கமல் தயாராக இருந்தார். படத்தில் பசங்க எல்லாம் ஓணானை அடிக்கற மாதிரி சீன். கமல் வேண்டாம் என்று சொல்வார். அதை பிலிம் இல்லாம எடுத்துட்டோம். எனக்கும் ஒளிப்பதிவாளருக்கும் தான் தெரியும். கமலோட கால்ஷீட்டை வீணாக்க வேண்டாம்னு எடுத்தோம்.

இதையும் படிங்க… அரசியலில் குதித்த விஜய்க்கு அஜீத்தின் ஆதரவு இருக்குமா? சவால்களில் சாதிப்பாரா?

அப்போ கமல் என்னன்னு கேட்க, ஆடிய்போயிட்டேன். வேணும்னா படம் நான் தாரேன். இப்படி எல்லாம் எடுக்கக்கூடாதுன்னு சொன்னார். இல்ல. பெங்களூருல இருந்து பிலிம் வந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னார். என்ன தேனிக்காரரே… இப்ப பிலிம் இருக்குல்ல. நடிக்கலாமான்னு கிண்டலா கேட்பார். அப்புறம் நடிச்சி எடுத்தோம்.

இந்தப்படத்தின் போது காந்திமதி அம்மா தான் பாரதிராஜாவுக்கு சிகரெட் வாங்க தினமும் காசு கொடுப்பாராம். அடடா என்ன ஒரு அழகான பந்தம்னு பாருங்க. அந்தக் காலத்துல சூது வாது இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒற்றுமையா பழகி இருக்காங்க… அதனால் தான் எதையுமே வெளிப்படையா பேசி கோபப்பட்டு அப்புறம் எதையும் மனசுக்குள்ள வச்சிக்காம சமாதானமாகி ஜாலியாகி கேலியும் கிண்டலுமா பேச ஆரம்பிச்சிடுறாங்க.

Published by
sankaran v

Recent Posts