மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தில் விக்ரம் , கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, அசோக் செல்வன் என எண்ணிலடங்கா பல்வேறு பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களையும் பிரம்மிப்புள்ளாக்கியுள்ளது. அந்த அளவுக்கு டீசரில் வந்த ஒவ்வொரு பிரேமும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்ற கூறலாம்.
இருந்தும் சில நெட்டிசன்கள் இப்படத்தையும், ஏற்கனவே தெலுங்கீழ் வெளியான பாகுபலி படத்தையும் ஒப்பிட்டு அந்த படத்தின் காட்சி அளவுக்கு இல்லையே என்று கூறி வருகின்றனர்.
அவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாகுபலி திரைப்படத்தில் 90 சதவீதம் கிராபிக்ஸ் காட்சிகள் தான். அதில் வரும் யானை, போர்க்களக் காட்சிகள் என அனைத்தும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளாக உருவாக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்களேன் – டீ வாங்கிட்டு வந்து எழுப்பினர் கேப்டன்.! என்ன மனுஷன்யா.?! நெகிழ்ந்து போன பிரபல இயக்குனர்…
ஆனால், பொன்னியின் செல்வனில் அப்படி இல்லை. அதில் வரும் யானை, குதிரை, போர்க்கள காட்சிகள் என அனைத்தும் ஒரிஜினலாக படமாகப்பட்டவை. யானை, குதிரை படமாக்குவதற்கு நம் நாட்டில் கடும் கட்டுப்பாடு இருப்பதால், தாய்லாந்து சென்று அதனை படமாக்கினார் படக்குழு. தாய்லாந்து மற்றும் இலங்கையில் இப்படத்தின் சூட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் என்றால், பொன்னியின் செல்வன் படத்தில் பெரும்பாலும் அனைத்தும் ஒரிஜினலாக அப்படியே எடுக்கப்பட்டது. ஆதலால், அந்த காட்சிகள் மிகவும் உயிரோட்டமாக ரசிகர் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் என கூறுகிறார்கள் சினிமாவாசிகள்.