கொஞ்சம் கூட யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸ் படங்கள்...ஒரு பார்வை

by sankaran v |   ( Updated:2022-12-29 02:46:59  )
கொஞ்சம் கூட யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸ் படங்கள்...ஒரு பார்வை
X

thekidi

ஒரு படத்தின் திரைக்கதையானது அதன் கிளைமாக்ஸில் தெரிந்துவிடும். பொதுவாக யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் கொண்ட படங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும். அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

வெள்ளைப் பூக்கள்

Vellai pookkal

விவேக், சார்லி நடித்த படம். விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார்.

ஓய்வு பெற்ற காவல்துறை டி.ஐ.ஜி-யான நாயகன் அமெரிக்காவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு வீட்டின் அருகே ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

தொடர்ச்சியாக இது போன்ற கொலைகள் அங்கு நடைபெற்று வருவதை அறிந்த நாயகன் குற்றவாளியை தேடிப் பிடிப்பது தான் இந்த படத்தின் கதை.

திரைக்கதையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இறுதி வரை விறுவிறுப்பாக காட்சிகளைக் கொண்டு சென்றிருப்பார் இயக்குனர். ஒவ்வொருவர் மீதும் நாயகன் சந்தேகப்படுவதும் கடைசியில் யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சியைத் தந்திருப்பார்கள்.

கபடதாரி

kabadathari

சிபிராஜ் நடிக்க பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம். கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற கவலுதாரி என்ற கிரைம் திரில்லர் படத்தை தமிழில் கபடதாரி என்னும் பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட 3 பேரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. அது தொடர்பான தகவல்களைச் சேகரித்து உண்மையான குற்றவாளியை தேடி அவனைக் கண்டுபிடிக்க முற்படும் காவல்துறை அதிகாரியின் பயணம் தான் இந்த கபடதாரி.

ராட்சசன்

Ratchasan

விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்த ஆக்ஷன் திரில்லர் படம். படத்தின் விறுவிறுப்பு ஆரம்பம் முதலே கொஞ்சமும் குறையாத வகையில் ராம்குமார் இயக்கியுள்ளார்.

சைக்கோ கொலையாளி ஒருவன் ஒரு சிலரைக் கொலை செய்கிறான். அவனைக் கண்டுபிடித்து வேட்டையாட நினைக்கும் நாயகன் மறுபுறம்.

கொடூரமான கொலைகள் கணிக்க முடியாத காட்சியமைப்பு விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ஒன்றிணைந்து படத்தின் இறுதி வரை இருக்கை நுனியில் அமர்ந்து திகிலோடு பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தி இருப்பார்கள் படக்குழுவினர்கள்.

தெகிடி

அசோக் செல்வன் நடிக்க ரமேஷ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் தலைப்பே ரசிகர்களைத் திரையரங்கிற்கு வரவழைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

படத்தில் நாயகன் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். அங்குஉள்ளவர்களது உத்தரவின்படி சில நபர்களின் தகவல்களை அலைந்து திரிந்து சேகரித்துக் கொடுக்கிறார். அந்த நபர்களில் ஒருவரான நாயகியின் மீது காதலும் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் தகவல் சேகரித்த நபர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். எதற்காகக் இந்தக் கொலைகள் நடக்கிறது? கொலையாளி யார்? என்பதை நாயகன் துப்பு துலக்கி கண்டு பிடிப்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.

பீட்சா

Beetsha

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திகில் படம் இது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

பீட்சா டெலிவரி செய்யும் நாயகன் தன் முதலாளியிடம் நாடகம் ஆடி எப்படி அவரையும் தன் சுற்றத்தார்களையும் ஏமாற்றி வைரங்களைத் திருடுகிறார் என்பது தான் "பீட்சா" படத்தின் மொத்த கதை.

படம் முடியும் வரை படத்தின் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் ஒரு கணம் கூட சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைத்து இருப்பார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதனால் தான் இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது.

Next Story