காதல் மன்னனா நீயும் கண்ணனா....இந்த வரியில் வரும் ஸ்டெப்ஸ்ஸை கவனிச்சீங்களா
டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றுள்ள 'பேர் வச்சாலும் வைக்கமா போனாலும் மல்லி வாசம்' மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரியும். அந்த பாட்டில் வரும் காதல் மன்னனா நீயும் கண்ணனா என்ற வரியில் வரும் நடனம் பலரும் பிடித்துள்ளது. அதற்கு ஆட்டம் போட்டு பலரும் டிரெண்டிங்காகி வருகிறார்கள்.
சந்தானம் ஹீரோவாக வெற்றி பெற பல முயற்சிகளில் எடுத்தார். அதில் தில்லுக்கு துட்டு படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. மற்ற படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால் தில்லுக்குதுட்டு பார்ட் 2 எடுத்தார்.அது ஓரளவு சுமாராகவே போனது.
இந்நிலையில் சந்தானம் நடித்த டிக்கிலோனா வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஆ னால் அந்த படத்தில் இடம் பெற்ற 'பேர் வச்சாலும் வைக்கமா போனாலும் மல்லி வாசம்' மிகப்பெரிய ஹிட்டானது. அந்த பாட்டு ஹிட்டானதால் பலரும் தற்போது ஆர்வமுடன் டிக்கிலோனா படத்தை ஓடிடியில் காண ஆர்வம் காட்டுகிறார்கள். படத்தை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணவைத்துள்ளது இந்த பாட்டு,
இளையராஜாவின் இன்னிசையில் உருவான இந்த பாடலை கொஞ்சம் கூட சிதைக்காமல் அப்படியே யுவன்சங்கர் ராஜா ரிமேக் செய்து பயன்படுத்தி உள்ளார், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் காதல் மன்னனா நீயும் கண்ணனா என்ற லைனில் ஹீரோயின் அனேகா ஆடும் ஆட்டம் பலருக்கும் பிடித்துள்ளது. அதேபோல் நடனம் ஆடி டிக்டாக் செய்து வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதுவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பாடல் பல வருடம் கழித்து மீண்டும் வந்து வைரல் ஆவது புதியது இல்லை என்றாலும் அப்படியே சிதைக்காமல் பயன்படுத்திதுதான் ஹைலைட். மக்களுக்கு ஒரு விஷயத்தை பிடித்துவிட்டால், கொண்டாடுவார்கள். அப்படித்தான் கொண்டாடப்படுகிறது இந்த பாட்டு.