Cinema News
அது வேற வாய்.. இது நாற வாய் – விஜயை உச்சி குளிர வச்சவரே ‘லியோ’ படத்திற்கு அம்பா வந்து நிக்கும் அவலம்
Dil Raju: விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வாரிசு. இந்த படம் பெரிய பேன் இந்தியா படமாக உருவானது. இதன் தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் உரிமையை லலித்திடம் தான் கொடுத்திருந்தார் வாரிசு பட தயாரிப்பாளரான தில் ராஜு.
படம் எதிர்பார்த்த அளவில் மக்களை திருப்தி படுத்தவில்லை. ஆனால் வாரிசு படத்தை ப்ரோமோட் செய்யும் போதும் அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதும் விஜயை பாராட்டி தள்ளினார் தில் ராஜு.
இதையும் படிங்க: அங்கயும் மிரட்டுனாங்க! பிரச்சினை வராத நாளே இல்ல போல – லியோ படத்தில் பட்ட வேதனையை பகிர்ந்த இயக்குனர்
அடுத்தப் படமும் விஜயை வைத்துதான் தயாரிக்க போகிறேன் என்றெல்லாம் பில்டப் கொடுத்து வந்தார். இந்த நிலையில் தில் ராஜுவாலேயே லியோ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விசாரித்ததில் லியோ படத்தை ஆந்திராவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியிருக்கிறாராம் தில் ராஜு.
இது விஜயின் மீதான தனி கருத்து வேறுபாடு இல்லை. தில் ராஜுவுக்கும் லலித்திற்கும் இடையே ஏற்கனவே தீர்க்கப்படாத கணக்குகள் இருக்கிறதாம். வாரிசு படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்யும் உரிமத்தில் ஏதோ கொடுங்கல் வாங்கலில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அதுதான் இப்போது பூதாகரமாக கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமலுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினிகாந்த்… படமும் மாஸ் ஹிட்டாம்..!
அந்த பணத்தை கொடுத்துவிட்டால் லியோ படத்தை ஆந்திராவில் வெளியிட எந்த பிரச்சினையும் இல்லை என்று தில் ராஜு தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்புதான் தில் ராஜுவின் தந்தை மரணமானார்.
அதை துக்கம் விசாரிக்க இன்று அல்லது நாளை லலித் ஆந்திரா செல்வாராம். அப்போதே இந்த பிரச்சினைக்கு முடிவு செய்துவிட்டுத்தான் வருவார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:சிங்கத்துக்கே சிறப்பு காட்சி இல்லையா!.. மாஸ் காட்டிய தளபதி.. லியோவுக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!..