விஜய்தான் நம்பர் ஒன்!.. அஜித்தை கடுப்பாக்கிய வாரிசு பட தயாரிப்பாளர்...இதுதான் விஷயமா?!..
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் இரு நடிகர்களுக்கு இடையே போட்டி இருக்கும். எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி, கமல் துவங்கி தற்போது விஜய் - அஜித் வரை இந்த போட்டி தொடர்கிறது.
இதில் முக்கிய விஷயம் என்னவெனில் பல வருடங்களுக்கு பின் விஜயின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாவதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பொதுவாக இரண்டு நடிகர்கள் ஒரே நேரத்தில் வெளியானால் அப்படங்கள் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை சமமாக பங்கிட்டு கொள்ளும். ஆனால், துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் அதிகமான தியேட்டர்கள் துணிவு படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் இரு படத்திற்கும் சமமான தியேட்டர்களை ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ‘தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன். இதுதான் வியாபாரம். எனவே, இரண்டு படத்திற்கும் சமமான தியேட்டர்கள் கொடுப்பது சரியாக இருக்காது. துணிவு படத்தின் வினியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குள் வேண்டும் என கேட்க போகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தில் ராஜூவின் இந்த பேட்டி அஜித்தை கோபப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தில் ராஜு தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் படங்களை எடுப்பவர். ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்தையும் தில் ராஜூதான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரவிச்சந்திரன் உயிர்பிரியும் தருவாயில் நடந்த அதிசயம்!.. குடும்பமே கதறி அழுத சோகம்!..