முதல் சந்திப்பில் ராமராஜன் கேட்ட கேள்வி!. ஆடிப்போன திண்டுக்கல் லியோனி!.. நடந்தது இதுதான்!..

Published on: April 2, 2024
Ramarajan, Leoni2
---Advertisement---

எம்ஜிஆருக்கு அடுத்து மக்களிடம் பேர் வாங்கியவர் நடிகர் ராமராஜன். இவரைப் பற்றியும், இவர் தற்போது நடித்து வரும் சாமானியன் படம் குறித்தும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

எம்ஜிஆர் பாடல் காட்சியில் கையைத் தூக்கி பாட ஆரம்பித்து விட்டால் கைதட்டலும், விசிலும் பறக்கும். அதற்கு அடுத்த படியாக ராமராஜனும் அவரைப் போலவே டிரஸ் போட்டு கையைத் தூக்கி பாடி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார்.

Also Read

கங்கா கௌரி, பன்னிக்குட்டி, ஆலம்பரா, என 3 படங்களில் மட்டும் நான் நடித்திருக்கிறேன். நான் ராமராஜனின் தீவிர ரசிகர். நான் முதன் முதலா மதுரை கோனார் மெஸ்ல தான் சந்தித்தேன். நான் தான் லியோனின்னு சொன்னேன். அப்படின்னா யாருன்னு கேட்டார். பட்டிமன்ற பேச்சாளர்.. நடுவர் என்று சொன்னேன். அப்படியா என்று கறி தோசை சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர் எழுந்திருச்சி வணக்கம் சொன்னார்.

Ramarajan
Ramarajan

இவ்வளவு பெரிய நடிகர் சாதாரண வாத்தியாருக்கு எழுந்து வணக்கம் சொல்கிறார். இவர் மிகப்பெரிய மனிதராக இருப்பார் என்று அன்று நினைத்தேன். இன்றும் அப்படியே இருக்கிறார். ஒட்டன்சத்திரம் பக்கத்தில் ராமராஜன் கிழவின்னு ஒருவர் இருக்கிறார். அவர் படத்தில் ராமராஜனை யாராவது அடித்தால் கொதித்து எழுந்த விடுவார். அந்த அளவு ராமராஜனின் மேல் அவருக்குப் பாசம் என்கிறார் லியோனி.

சாமானியன் ஹீரோ யாருன்னு தெரியுமா? திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார். ராமராஜனின் மருமகனாக வருகிறார். கடனால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

இதையும் படிங்க… சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

சாமானியன் என்ற டைட்டிலில் படம் எடுத்து இருக்கிறார்கள் என்றால் இது அனைத்து சாமானிய மக்களையும் போய்ச்சேரும். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் படங்களை விட வெற்றி பெறப் போது சாமானியன். இவ்வாறு திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.