பிக்பாஸ்ல இருந்து வெளியே வந்ததும் சிவகார்த்திகேயன் என்கிட்ட சொன்னது! சீக்ரெட்டை உடைத்த தினேஷ்
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் புகழ்மிக்க நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் ஒரு போற்றப்படும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனை சினிமாவிற்கு கொண்டு வந்தவர் தனுஷ்.
மூணு என்ற படத்தின் மூலம் இரண்டாவது நாயகனாக நடிக்க வைத்தார். அதன் பிறகு மெரினா படம்தான் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக்கியது. அதன் பிறகு அவருக்கான வழியை சிவகார்த்திகேயனே அமைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: விஜய் டைரக்டர் மட்டுமல்ல அவர் பண்ற அதுவும் வேணும்… தலைவர்171ல் நடக்க இருக்கும் கூத்து….
இந்தளவு ஒரு உயரத்தை அடைய சிவகார்த்திகேயன் பட்ட கஷ்டங்கள் ஏராளம். சினிமாவில் சாதிக்க வரும் ஒவ்வொரு மனிதர் பின்னாடியும் முட்கள் நிறைந்த பாதைகள் இருக்கத்தான் செய்கிறது. அதே போல் உள்ள பாதையை கடந்துதான் சிவகார்த்திகேயனும் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தினேஷ் இன்று ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். கூடவே அவருடைய சக போட்டியாளர்கள் நண்பர்களான விஷ்ணு மற்றும் மணியும் இருந்தனர்.
இதையும் படிங்க: யூட்யூப் பிரபலத்தினை எல்ஐசி படத்தில் இறக்கிய விக்னேஷ் சிவன்!… வெளியான வைரல் வீடியோ
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் சிவகார்த்திகேயனை ஒரு இடத்தில் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம் தினேஷுக்கு. அப்போது சிவகார்த்திகேயன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசினாராம். முழுவதும் பார்க்க முடியாது என்றாலும் சின்ன சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்ப்பாராம் சிவகார்த்திகேயன்.
ஆனால் சிவகார்த்திகேயன் மனைவி முழுவதுமாக பார்ப்பாராம். அப்போது தினேஷிடம் சிவகார்த்திகேயன் ‘பாஸிட்டிவ் நெகட்டிவ் எதுவேண்டுமானாலும் வரும். ஆனால் எல்லாவற்றையும் தலைக்கு ஏற்றாமல் கடந்து போவதுதான் நல்லது’ என்ற அறிவுரையை வழங்கினாராம்.
இதையும் படிங்க: ஓடும் காரில் போகும்போதே பாடல் எழுதிய கண்ணதாசன்… கவியரசர்னு சும்மாவா சொன்னாங்க…?!
COPYRIGHT 2024
Powered By Blinkcms