தான் நடித்த குக்கூ படத்தால் அடுத்த 5 வருடங்களுக்கு மிகுந்த கஷ்டத்தை அனுபவித்ததாக கெத்து தினேஷ் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தினேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் ரிஸ்க்கான கதாபாத்திரங்களை கூட மெனக்கட்டு நடித்து வருகின்றார். தன்னுடைய முதல் படத்தில் இருந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் தினேஷ்.
இதையும் படிங்க: Kanguva: 2 ஆயிரம் கோடி உருட்டுனது பொய்யா? சென்னையில் காத்து வாங்கும் கங்குவா…
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவான அறிமுகமான இவருக்கு முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பாக சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றார்.
ஆடுகளம், எவனோ ஒருவன், ஈ போன்ற படங்களில் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அறிமுகமானது அட்டகத்தி திரைப்படத்தில் தான். அதனை தொடர்ந்து குக்கூ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த பலரும் இவருக்கு தேசிய விருதே கொடுக்கலாம் என்ற அளவிற்கு மிகச் சிறப்பாக பாராட்டி இருந்தார்கள். ஆனால் அவருக்கு எந்த ஒரு விருதும் கிடைக்காமல் போனது வருத்தம் தான்.
இந்த திரைப்படத்தில் கண் தெரியாதவர் வேடத்தில் நடித்திருப்பார். அதிலும் தன்னுடைய கண்ணை வித்தியாசமாக வைத்து நடித்தது மிகச் சிரமமாக இருந்தது என்று பல இடங்களில் அவர் கூறியிருந்தார். இதை தொடர்ந்து விசாரணை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது.
இந்த திரைப்படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே சென்று விட்டார் தினேஷ். இந்த திரைப்படத்திலிருந்து அட்டகத்தி தினேஷ் என்கின்ற இவரின் பெயர் கெத்து தினேஷ் என்று மாறிவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் நடத்திவரும் சாய் வித் சித்ரா என்கின்ற youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
அந்த பேட்டியில் பல விஷயங்களை குறித்து பகிர்ந்திருந்தார். முதன் முதலில் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தில் தொடங்கி கடைசி படம் வரை தனது திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் தினேஷ். அதில் குக்கூ திரைப்படத்திற்கு பிறகு தனக்கு நேர்ந்த சோகத்தையும் பகிர்ந்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் படம் முழுக்க முழுக்க கண்களை வித்தியாசமாக வைத்து எடுக்க வேண்டிய சூழல் உருவானது.\
இதையும் படிங்க: Kanguva: எல்லாரும் கங்குவாவை கழுவி ஊத்த இவர்தான் காரணம்!.. இப்படி பண்ணிட்டியே புரோ!…
இரண்டு வருடங்கள் இப்படியே வைத்திருந்த காரணத்தால் தனக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் தாக்கம் ஐந்து ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த படத்திற்கு பிறகு எங்கேயாவது ஷூட்டிங் சென்றால் கேமராவை சரியாக பார்க்க முடியாமல், லைட் வெளிச்சம் பட்டால் கண்களை மூடிக்கொள்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அதன் பிறகு மருத்துவரிடம் காட்டி இந்த பிரச்சனையை சரி செய்தேன் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
கங்குவா திரைப்படம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…
Delhi Ganesh:…