ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒரு நடிகர் கமிட்டாகி இருப்பார். பிறகு, ஏதோ சில காரணங்களால் காட்சியமைப்புகள் பிடிக்காமலோ அல்லது அந்த கதைக்கு அந்த ஹீரோ பொருத்தம் இல்லாமல் இருப்பதாலும் அந்த படத்தில் இருந்து ஹீரோ விலகும் சூழல் ஏற்படும். அதன் பிறகு வேறு ஒரு ஹீரோ வந்து நடித்து. அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும். இந்த கதை தமிழ் சினிமாவில் அதிக முறை நடந்துள்ளது.
அது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் திரைப்படங்களிலும் அதிகம் நடந்து உள்ளது. ஆம் ஷங்கர் முதலில் ஒரு கதை எழுதி விட்டு அதை ஒரு நடிகரிடம் கொண்டு செல்வார். ஆனால், அந்த நடிகர் நமக்கு இது செட் ஆகுமா என்று யோசித்து விலகி விடுவார். அதன் பிறகு வேறொரு ஹீரோவிடம் அந்த கதை சென்றுவிடும். இது எதேர்சையாகவோ அல்லது அந்த கதைக்கு தேவைப்பட்டோ தொடர்ந்து நடைபெறும்.
அப்படித்தான் ஷங்கர் முதன்முதலாக இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு முதலில் பேசப்பட்ட நடிகர் சரத்குமார். பிறகு கால்ஷீட் பிரச்சனை காரணமாக . சரத்குமர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகுதான் அர்ஜுன் உள்ளே வந்தார், படமும் சூப்பர் ஹிட் ஆனது.
இரண்டாவது படமான காதலன் படத்திற்கு முதலில் ஷங்கர் பேசிய நடிகர் நடிகர் பிரசாந்த்தாம். அதன்பிறகு, ப்ரசாந்த்திற்கு அந்த சமயம் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், கால்ஷீட் கிடைக்கவில்லை. உடனே பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து அந்த படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கினார் ஷங்கர்.
மூன்றாவதாக இந்தியன் திரைப்படம் முதலில் ரஜினியை மனதில் வைத்து கதை எழுதினாராம் ஷங்கர். அதன் பிறகு அந்த கதையை கமலிடம் கூறி கமல் ஒப்புக்கொண்டு அந்த படத்தில் நடித்து முடித்தார். சில காட்சிகள் ரஜினிக்கு என்று எழுதியது போல் இருக்கும். ஆனால் அதில் கமல் நடித்து ரஜினியின் சிந்தனை வராதபடி ரசிகர்கள் மனதில் நின்று இருப்பார். படம் மெகா ஹிட் ஆனது.
பிறகு ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க பேசப்பட்ட நடிகர் அஜித். அப்போது தான் வாலி திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார் அஜித். மீண்டும் மீண்டும் இரட்டை வேடம் என அவர் யோசித்ததால் அந்த கதை பிரசாந்த்திடம் சென்றது.
முதல்வன் திரைப்படம் கதையாக்கம் செய்யப்பட்டு முதன் முதலில் ஷங்கர் அணுகிய நடிகர் ரஜினிகாந்த். ஆனால்,அது பக்கா அரசியல் களம் என்பதால் அதில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டார். பிறகு அந்த கதை விஜய்க்கு சென்றது. சின்ன வயதில் அரசியல் படம் வேண்டாம் என விஜய் தரப்பு மறுத்துவிட்டதால் இறுதியில் அர்ஜுன் வசம் சென்று படம் மெகா ஹிட்டானது.
இறுதியாக ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் எந்திரன். அந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் கமல்ஹாசன். முன்னணி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருந்தது. இதற்கான ஷூட்டிங் எல்லாம் சில நாட்கள் நடைபெற்றது. ஆனால் அவளோ பெரிய பட்ஜெட் திரைப்படத்தை அந்த காலத்தில் அந்த நிறுவனத்தால் எடுக்க முடியவில்லை. அதன் காரணமாக அப்போது ரோபோ அந்த நேரத்தில் டிராப் செய்யப்பட்டது.
இதையும் படியுங்களேன் – இதுதான் கொழுந்தியா குசும்போ.?! மாட்டிக்கொண்டு முழிக்கும் அஜித்.! இதுதான் நடந்ததாம்.!
அதன்பிறகு வருடங்கள் கழிந்து ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எந்திரன் எனும் பெயரில் உருவாகி, அந்த திரைப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இதே போல நண்பன் படத்தில் நடிப்பதற்கும் ஷங்கர், முன்னனி நடிகர்களையே சிபாரிசு செய்தாராம். ஆனால் அவர்களின் கால்ஷீட் பிரச்சினை, திரைக்கதை அனைவர்க்கும் தகுந்தாற்போல எவ்வாறு இருக்கும், போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து அதன் பிறகுதான் விஜய் முன்னணி வேடத்தில் நடித்து, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…