
Cinema News
ஹாட் நியூஸ் : விஜயின் அலுவலகத்துக்கு சென்ற சிறுத்தை சிவா.! இணையத்தில் கதறும் ரசிகர்கள்.!
சிறுத்தை எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் சிறுத்தை சிவா. அடுத்ததாக அஜித்தை வைத்து வீரம், வேதாளம் எனும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து நல்ல இகமர்சியல் யக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சிறுத்தை சிவா.
அதனை தொடர்ந்து விவேகம் எனும் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் சரியாக போகவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து விஸ்வாசம் எனும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து தான் ஒரு சூப்பர்ஹிட் இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
அவ்வபோது சிறுத்தை சிவா விஜயை வைத்து எப்போது படம் இயக்குவார் என்று பேச்சுகள் எழும். ஆனால், அந்த பேச்சுகள் அப்படியே அமைதியாகி விடும்.
கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்தை எனும் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் தான் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிறுத்தை சிவா. அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த கூட்டணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று.
இதையும் படியுங்களேன் – பாடகர் கேகே மரணத்தில் சந்தேகம்.? தலை, முகத்தில் காயம்.? பேரதிர்ச்சியில் திரையுலகம்.!
இந்த சமயத்தில் தற்போது சிறுத்தை சிவா விஜய்யை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துவிட்டு வந்துள்ளாராம். அங்கு விஜய்க்கு, சிறுத்தை சிவா கதை கூறியுள்ளாராம். அந்த கதை விஜய்க்கும் பிடித்து போனதாக கூறப்படுகிறது. அந்த கதையை தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் சிவா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆதலால் , சிறுத்தை சிவா படம் தளபதி விஜயின் 68வது படமாக கூட இருக்கலாம் என கூறபடுகிறது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், சிறுத்தை சிவா பட பாணி வேறு அது விஜய்க்கு செட் ஆகாது வேண்டாம் என கூறி இணையத்தில் கமெண்ட்களை பார்க்கக்கவிட்டு வருகின்றனர்.