சொந்த தந்தையையே அசிஸ்டெண்ட்டாக வைத்திருக்கும் சிம்பு பட இயக்குனர்… இது தெரியாம போச்சே!!

by Arun Prasad |
Adhik Ravichandran
X

Adhik Ravichandran

“த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”, “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது பிரபு தேவாவை வைத்து “பகீரா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் “மார்க் ஆண்டனி” என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

 Adhik Ravichandran

Adhik Ravichandran

“கே 13’, “நேர்கொண்ட பார்வை”, “கோப்ரா” ஆகிய திரைப்படங்களில் ஆதிக் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் தனது முதல் திரைப்படத்திலேயே குறிப்பிடத்தக்க வெற்றி இயக்குனராக திகழ்ந்தார்.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தனது தந்தையையே உதவி இயக்குனராக வைத்துக்கொண்டுள்ள செய்தி ஒன்று தெரிய வந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனின் தந்தையான ரவிச்சந்தரன் சினிமா துறையில் 20 வருடங்களுக்கும் மேலாக உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளாராம். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படங்களின் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்களித்துள்ளாராம்.

Adhik and his father Ravichandran

Adhik and his father Ravichandran

இதனை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் குறித்த முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் அவர் தந்தையின் தோல்வியை கண்டுதான் சினிமாவில் இயக்குனராக வளர்ந்தாராம். தனது தந்தை ஒரு உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்ற விஷயமே ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வெகு நாட்கள் கழித்துத்தான் தெரிய வந்ததாம்.

இதையும் படிங்க: “மானத்தை பத்தி பேச தகுதி இருக்கா?”… சீண்டிப்பார்த்த ரசிகர்…வெளுத்து வாங்கிய ஆண்ட்ரியா…

Adhik Ravichandran

Adhik Ravichandran

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் “எனது தந்தையை இந்த சினிமா உலகம் படாதபாடு படுத்தியது. அவர் வெற்றிபெறாத இந்த சினிமா உலகில் நான் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்த சினிமா உலகில் நான் அடியெடுத்து வைத்தேன்.

எனது தந்தை பல கதைகளை வைத்திருக்கிறார். ஆனால் எனது தந்தையை போன்ற திறமைசாலியை இந்த சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வெறுப்புதான் என்னை சினிமா உலகில் ஈடுபடவைத்ததற்கான காரணமாக இருந்தது” என கூறியுள்ளாராம்.

Next Story