கொட்டுக்காளி தோத்து போனதுக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான்!.. அட என்னப்பா சொல்றீங்க?!..

by சிவா |
soori
X

#image_title

Kottukkaali: காமெடி நடிகராக பல படங்களிலும் நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் தனது விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக மாற்றினார். அந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் சூரியின் நடிப்பு வேறு ஒரு பரிமாணத்தில் இருந்தது. அதற்கு காரணம் வெற்றிமாறன்.

அதன்பின் கருடன் என்கிற ஹிட் படத்தையும் கொடுத்தார் மாரி. அதோடு, சமீபத்தில் கொட்டுக்காளி படமும் வெளியானது. இந்த திரைப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தனது கூழாங்கல் திரைப்படம் மூலம் பிரபலமானவர். குறும்படமா?, சினிமாவா? என கண்டுபிடிக்கமுடியாதபடி இவரின் படங்கள் இருக்கும்.

இதையும் படிங்க: சிம்பு, திரிஷா திருமணம் செய்யாததற்கு இது தான் காரணமா? அடக்கடவுளே…

கொட்டுக்காளி திரைப்படம் நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. எனவே, இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. அதோடு, இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலா போன்றவர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி பேசியிருந்தனர்.

அதேநேரம், கருடனை மனதில் நினைத்துகொண்டு இப்படத்தை பார்க்க வராதீர்கள் என சூரியும் சொன்னார். இந்த படத்தை சூரியின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். எனவே, இந்த படத்தை புரமோட் செய்த செய்தியாளர் சந்திப்பையும் அவர் நடத்தினார்.

kottukkali

kottukkali

ஆனால், கடந்த 23ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. கமர்ஷியல் படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள். இந்த படத்தில் பின்னணி இசை கூட இல்லை. மேலும், நீளமான காட்சிகள் ஒரே ஷாட்டில் காட்டப்பட்டது ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. அதோடு, இந்த படத்தோடு வெளியான வாழை திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில், விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர் ‘கொட்டுக்காளி படத்தை திரைப்பட விழாக்களில் திரையிடலாம். அதை வெகுஜனங்கள் பார்க்கும் தியேட்டரில் திணித்திருக்கக் கூடாது. அப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்க வேண்டும். மேலும், வாழை படத்தோடு கொட்டுக்காளியை ரிலீஸ் செய்திருக்கக் கூடாது’ எனவும் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: கண்ணியத்தை தவற விட்ட சிவகார்த்திகேயன்.. அவர் பண்ண பெரிய தவறு! வெளுத்து வாங்கிய பிரபலம்

Next Story