ச்சே… இந்த படத்தையா மிஸ் பண்ணோம்… பொது மேடையில் கவலைப்பட்ட அமீர்…

Ameer
இயக்குனர் அமீர்
“ராம்”, “பருத்திவீரன்” போன்ற தரமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்தவர் அமீர். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய “ஆதிபகவன்” திரைப்படம் வெற்றித்திரைப்படமாக அமையவில்லை. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் அமீர்.

Ameer
எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு அமீர், ஆர்யாவை வைத்து “சந்தனத் தேவன்” என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ இத்திரைப்படம் அப்படியே நின்றுபோனது. இதனை தொடர்ந்து தற்போது அமீர், “இறைவன் மிகப் பெரியவன்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அமீர், ஒரு திரைப்படத்தை தவறவிட்டுவிட்டதாக கூறியுள்ளார். அது என்ன திரைப்படம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
காதல்...
“பருத்திவீரன் டப்பிங் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இயக்குனர் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படம் மிக பிரமாதமாக இருப்பதாக என்னிடம் வந்து கூறினார். அதன் பின் நான் காதல் திரைப்படத்தை சென்று பார்த்தேன்.

Kaadhal
காதல் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாலாஜி சக்திவேலுக்கு நான் தொடர்புகொண்டேன். ‘என்னய்யா இப்படி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்க?’ என்றேன். காதல் திரைப்படத்தின் களம் மதுரை. நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன், அந்த கதையில் இருக்கும் அத்தனையையும் பார்த்து வளர்ந்தவன்.

Balaji Sakthivel
இந்த களத்தை நான் மிஸ் செய்துவிட்டேன். எப்படி என்னால் தவறவிட முடிந்தது, பாலாஜி சக்திவேல் எப்படி இந்த கதையை பிடித்து தூக்கிக்கொண்டு வந்தார் என்று ஒரு வேதனை இருந்தது. அவ்வளவு சிறப்பாக இந்த படத்தை இயக்கியிருந்தார் பாலாஜி சக்திவேல்” என்று அமீர் அந்த விழாவில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக காதல் திரைப்படத்தை புகழ்ந்து பேசினார்.