அந்த படத்துல ரஜினி அப்படி என்ன நடிச்சார்!.. எதற்கு விருது?!. பொங்கிய இயக்குனர் அமீர்!...
தமிழில் உள்ள சினிமா நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அதிக படங்கள் பெரும் ஹிட் கொடுக்கக்கூடியவை. முந்தைய தலைமுறை நடிகர்களில் சிறப்பான நடிகர்கள் என கூறப்படுபவர்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கே முன்னுரிமை இருக்கும்.
ஆனால் ஒரு பேட்டியில் இயக்குனர் அமீர் ரஜினிகாந்தின் நடிப்பு குறித்து விமர்சனம் அளித்துள்ளார். தமிழில் பருத்திவீரன், ராம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அமீர். தற்சமயம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கர் விருதை பெற்றது.
ஆனால் அந்த பாடலுக்கு காசு கொடுத்து ஆஸ்கர் வாங்கியதாக ஒரு பேச்சு இருந்தது. இதுக்குறித்து இயக்குனர் அமீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் “ஆஸ்கர் மட்டும் இல்லை. எல்லா விருதுகளுக்கு பின்னாடியும் அரசியல் இருக்கு. ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
ரஜினிகாந்த் நன்றாக நடிக்கவில்லை
ஆனால் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க? அந்த படத்தில் ரஜினிகாந்த் நல்லவா நடிச்சிருந்தார்? என கேள்வி எழுப்பினார். அப்ப ரஜினிகாந்த் நல்ல நடிகர் இல்லைன்னு சொல்றிங்களா? என கேட்டபோது “நான் அப்படி சொல்லலை. அவர் சிவாஜி திரைப்படத்தில் அவ்வளவு சிறப்பாக நடிக்கவில்லை எனதான் கூறுகிறேன்.
அவர் நடித்த படங்களில் ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்றவை அவர் சிறப்பாக நடித்த திரைப்படங்கள். ஆனால் அவற்றிற்கு எந்த ஒரு விருதையும் தரவில்லை. அதுதான் விருதுகளின் அரசியல்” என அமீர் விளக்கம் அளித்திருந்தார்.