பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு பதிலா இவர்தாம் நடிக்க இருந்தாராம்! – எந்த நடிகர் தெரியுமா?
சினிமாவில் திரைப்படங்களின் கதை எழுதப்படுவதில் துவங்கி படம் முடிவடையும் வரை எந்த நேரத்திலும் எந்த ஒரு மாற்றமும் நிகழலாம். இப்படி எதிர்ப்பாராமல் நடந்த பல மாற்றங்கள் கதாநாயகர்களை பெரிய நட்சத்திரங்களாகவும் மாற்றியுள்ளது. அதே சமயம் பெரும் வாய்ப்புகளை இழக்கவும் செய்துள்ளது.
அப்படி இரண்டு நட்சத்திரங்களுக்கு வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம்தான் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்தி நடித்த முதல் படம். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போதைய காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் அமீர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குனர் அமீர் இந்த படத்தின் கதையை எழுதும்போது அதில் கார்த்தியை கதாநாயகனாக நடிக்க வைக்க யோசனையே இல்லை. ஏனெனில் அதே சமயத்தில் பாக்கியராஜின் மகனான நடிகர் சாந்தனுவும் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி கொண்டிருந்தார். எனவே பருத்திவீரன் படத்தில் சாந்தனுவை நடிக்க வைப்போம் என முடிவு செய்தார் அமீர்.
இதுக்குறித்து சாந்தனுவிடமும் பேசியிருந்தனர். அதே சமயம் சக்கரக்கட்டி என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் சாந்தனு சக்கரக்கட்டி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பிறகுதான் மாற்று ஏற்பாடாக ஹீரோவாக கார்த்தியை வைத்து படம் தயாரானது.
ஆனால் சாந்தனு இப்படி நடித்திருப்பாரா? என யோசிக்கும் வகையில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி. அதன் பிறகு கார்த்தி பெரும் நடிகராவதற்கு பருத்திவீரன் திரைப்படமே முக்கிய காரணமாக இருந்தது.