தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நிற்கும் தளபதி விஜய், ஆரம்ப கால கட்டத்தில் தனது அப்பா SA.சந்திரசேகர் உதவியுடன் கதைகளை கேட்டு உறுதி செய்து வந்தார். அவரது இயக்கத்தில் பல படங்களில் விஜய் நாயகனாக நடித்துள்ளார்.
அதன்பின்னர் S.A.சந்திரசேகர் தனது மகன் விஜய்க்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு அதனை விஜய்க்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க கூறி அதனை விஜய்க்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைத்துள்ளார்.
அந்த நேரத்தில் 2005 காலகட்டத்தில் இயக்குனர் அமீர் விஜய்யிடம் ஒரு கதை கூறியுள்ளாராம். கதையை கேட்டு பாராட்டிய விஜய், இந்த கதையை ஒரு முறை என் தந்தையிடம் கூறி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் –வாடிவாசலை தவிர மற்ற எல்லா வேலைகளையும் பாக்குறீங்களே?! ரசிகர்கள் குமுறல்.!
அதற்கு சம்மதித்த இயக்குனர் அமீர், SA.சந்திரசேகரிடம் இந்த கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட சந்திரசேகர் கதையில் விஜய்க்கு என சில மாற்றங்களை கூறியுள்ளார்.
இந்த மாற்றங்களை எப்படி செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்ற இயக்குனர் அமீர், பின்னர் விஜயை நாடுவதை விட்டு விட்டு நடிகர் ஜீவாவிடம் அந்த கதையை கூறி படத்தை இயக்கி விட்டார். அந்த திரைப்படம் தான் ராம். ராம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…